ஒத்தையா நின்னு கெத்தா சம்பவம் பண்றான்யா.. முன்னாடி ஓடிஐ, டி20ல செஞ்சுரி, இப்போ டெஸ்டுல செஞ்சுரி! - சுப்மன் கில்-க்கு குவியும் பாராட்டுக்கள்! 1

டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் புஜாரா மற்றும் ரோகித் சர்மா இருவரும் ஆட்டம் இழந்தாலும், தனி ஆளாக போராடி சதம் அடித்த சுப்மன் கில்லுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 480 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன பிறகு, இந்திய அணி தற்போது முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.

இரண்டாம் நாள் முடிவில் 36 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி இருந்த இந்திய அணிக்கு, இன்று மூன்றாம் நாளில் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் மீண்டும் பேட்டிங்கை துவங்கினர். துவக்கம் முதலே அதிரடியான அணுகுமுறையில் விளையாடி வந்த ரோகித் சர்மா எதிர்பாராதவிதமாக குன்னமென் பந்துவீச்சில் 35 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். கில் மற்றும் ரோகித் சர்மா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 74 ரன்கள் சேர்த்தது.

ஒத்தையா நின்னு கெத்தா சம்பவம் பண்றான்யா.. முன்னாடி ஓடிஐ, டி20ல செஞ்சுரி, இப்போ டெஸ்டுல செஞ்சுரி! - சுப்மன் கில்-க்கு குவியும் பாராட்டுக்கள்! 2

அதன் பிறகு உள்ளே வந்த புஜாரா, சுப்மன் கில்லுடன் பார்ட்னர்ஷிப் அமைத்தார். வழக்கம்போல நங்கூரமான ஆட்டத்தை புஜாரா வெளிப்படுத்தினார். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 113 ரன்கள் சேர்த்தது. புஜாரா 42 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும் மறுமுனையில் அபாரமாக விளையாடி வந்த சுப்மன் கில் டெஸ்ட் அரங்கில் தனது இரண்டாவது சதத்தை பூர்த்தி செய்தார்.

இந்த ஆண்டு சுப்மன் கில்லுக்கு இதுவரை மிகச்சிறந்த ஆண்டாக அமைந்திருக்கிறது. 2023ல் இதுவரை விளையாடிய 6 ஒருநாள் போட்டிகளில் இரண்டு சதங்கள் மற்றும் ஒரு இரட்டை சதம் அடித்தார். அதேபோல் டி20 போட்டிகளில் அறிமுகம் ஆனார். டி20 தொடரில் முதல் சதத்தை அடித்து இந்திய வீரர்கள் மத்தியில் அதிகபட்ச டி20 ஸ்கோரை பதிவு செய்தார்.

ஒத்தையா நின்னு கெத்தா சம்பவம் பண்றான்யா.. முன்னாடி ஓடிஐ, டி20ல செஞ்சுரி, இப்போ டெஸ்டுல செஞ்சுரி! - சுப்மன் கில்-க்கு குவியும் பாராட்டுக்கள்! 3

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. மூன்றாவது டெஸ்ட் போட்டியில் கிடைத்த வாய்ப்பிலும் சரியாக செயல்பட முடியவில்லை. ஆனால் விளையாடிவரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து சதம் அடித்திருக்கிறார்.

ஓராண்டில் மூன்றுவித போட்டிகளிலும் சதம் அடித்த வெகு சில இந்திய வீரர்களுள் இவரும் ஒருவர் ஆனார். இப்படி பல சாதனைகளை படைத்த சுப்மன் கில்லுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

ஒத்தையா நின்னு கெத்தா சம்பவம் பண்றான்யா.. முன்னாடி ஓடிஐ, டி20ல செஞ்சுரி, இப்போ டெஸ்டுல செஞ்சுரி! - சுப்மன் கில்-க்கு குவியும் பாராட்டுக்கள்! 4

ட்விட்டரில் அவருக்கு குவிந்த பாராட்டுகளில் சிலவற்றை இங்கே காண்போம்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *