இந்த அசிங்கம் உங்களுக்கு தேவையா..? பாகிஸ்தான் அணியை வச்சு செய்யும் நெட்டிசன்கள்
தனது சொந்த மண்ணிலேயே இலங்கை அணியிடம் படுதோல்வி அடைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர்.
இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. ஒருநாள் தொடர் முடிவடைந்த நிலையில், டி20 தொடர் நடந்துவருகிறது. 3 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி நேற்று நடந்தது.
லாகூரில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் குணதிலகாவும் ஃபெர்னாண்டோவும் இணைந்து அபாரமாக ஆடி ரன்களை சேர்த்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 84 ரன்களை சேர்த்தனர். ஃபெர்னாண்டோ 33 ரன்களில் ஆட்டமிழந்தார்.

சிறப்பாக ஆடி அரைசதமடித்த குணதிலகா 57 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் பானுகா ராஜபக்சா மட்டுமே 30 ரன்களுக்கு மேல் சேர்த்தார். ராஜபக்சாவை 16வது ஓவரின் கடைசி பந்தில் வீழ்த்திய பாகிஸ்தான் அணியின் இளம் ஃபாஸ்ட் பவுலர் முகமது ஹஸ்னைன், அதற்கடுத்து அவர் வீசிய 19வது ஓவரின் முதல் பந்தில் ஷனாகாவையும் இரண்டாவது பந்தில் ஜெயசூரியாவையும் வீழ்த்தி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து இலங்கை அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் அடித்தது.
166 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் பாபர் அசாம் அதிரடியாக தொடங்கினார். ஆனால் இரண்டாவது ஓவரிலேயே 13 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து உமர் அக்மல் களத்திற்கு வந்த முதல் பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேற, மற்றொரு தொடக்க வீரரான ஷேஷாத்தும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினார்.

கேப்டன் சர்ஃபராஸ் அகமது 24 ரன்களிலும் இஃப்டிகார் அகமது 25 ரன்களிலும் ஆட்டமிழக்க, அதன்பின்னர் வந்த பாகிஸ்தான் வீரர்கள் அனைவருமே ஒற்றை இலக்கத்தில் வெளியேற, பாகிஸ்தான் அணி 18வது ஓவரில் 101 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து இலங்கை அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என இலங்கை அணி முன்னிலை பெற்றுள்ளது.
வரவே மாட்டேன் என்று அடிம்பிடித்த இலங்கை அணியை வம்படியாக தனது நாட்டிற்குள் வரவழைத்து தற்பொழுது படுதோல்வியையும் சந்தித்துள்ள பாகிஸ்தான் அணியை சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் வச்சு செய்து வருகின்றனர்.
அதில் சில;
Sri Lanka beat Pakistan by 64 runs in 1st T20I. Not only batting and bowling, Pakistan's running between the wicket was also fantastic ??? #PAKvSL #PAKvsSL pic.twitter.com/a41LjzP5Wn
— Sir Jadeja fan (@SirJadeja) October 5, 2019
Today was the first time since October 2017 that Pakistan failed to hit a single SIX in a completed T20I.
The last time was also against Sri Lanka at Abu Dhabi. #PAKvSL
— Israr Ahmed Hashmi (@IamIsrarHashmi) October 5, 2019
"The Ball has Travelled From Lahore To Islamabad. WHAT A SIX TAPTAAN.!"
@liaqat_nida22???#PAKvSL pic.twitter.com/hclPK61l3C— Wajid Afridi (@Waji_12) October 5, 2019
Eighth-placed Sri Lanka toured Pakistan with what was dismissed as a second-string side.
They took down top-ranked Pakistan all right.
Learnt your lesson, cricket fans?
Never underestimate The Lions.
Never miss a Sri Lanka match.
Never.#PAKvSL
— Abhishek Mukherjee (@ovshake42) October 5, 2019
Umar Akmal beats elder brother Kamran Akmal to reach 2nd spot for most ducks ? in T20 cricket ??? #PAKvSL #PAKvsSL pic.twitter.com/za0R3UaKx6
— Sir Jadeja fan (@SirJadeja) October 5, 2019
Umar Akmal and Kamran Akmal hold the record of getting out on 0 in T20I cricket the highest number of times for Pakistan. Umar Akmal has 26 ducks while Kamran Akmal has 24 ducks. The Dangermen for their own team – #PakVsSri #PAKvSL
— Wajahat ?? (@KazmiWajahat) October 5, 2019