ஓவராக பேசியதால் ரசிகர்களிடம் வாங்கி கட்டி கொண்ட முன்னாள் வீரர் !! 1

ஓவராக பேசியதால் ரசிகர்களிடம் வாங்கி கட்டி கொண்ட முன்னாள் வீரர்

இந்தியா – வங்கதேசம் இடையேயான பகலிரவு டெஸ்ட் போட்டியில் வர்ணனையின்போது, ஹர்ஷா போக்ளேவிடம் ஆணவமாக பேசிய சஞ்சய் மஞ்சரேக்கரை ரசிகர்களும் நெட்டிசன்களும் கடுமையாக விமர்சித்துவருகின்றனர்.

இந்தியா – வங்கதேசம் இடையே கொல்கத்தாவில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடந்தது. இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய இரண்டு அணிகளுமே இந்த போட்டியில்தான் பகலிரவு டெஸ்ட் போட்டியாக ஆடியது.

இரு அணிகளுமே முதன்முறையாக பிங்க் பந்தில் ஆடின. பிங்க் பந்தின் தன்மை எப்படி இருக்கப்போகிறது? இந்திய ஆடுகளங்களில் பிங்க் பந்து செயல்பாடுகள் ஆகியவை குறித்த எதிர்பார்ப்பு இருந்தது. பிங்க் பந்தின் சீம் சிவப்பு பந்தை விட அதிகமாக இருந்ததால் பந்து நன்றாக ஸ்விங் ஆனது. அதுமட்டுமல்லாமல் எக்ஸ்ட்ரா பவுன்ஸும் இருந்தது.

ஓவராக பேசியதால் ரசிகர்களிடம் வாங்கி கட்டி கொண்ட முன்னாள் வீரர் !! 2

இஷாந்த் சர்மா, ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோரின் துல்லியமான வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் வங்கதேச வீரர்கள் தலையிலும் உடம்பிலும் பயங்கரமாக அடி வாங்கினர். அதிலும் அந்த அணி வீரர்கள், இரண்டு இன்னிங்ஸ்களிலுமே பெரும்பாலும், லைட் வெளிச்சத்தில் இரவில்தான் ஆடினார்கள்.

வங்கதேச வீரர்கள் சரியாக ஆடாமல் உடம்பில் அடி வாங்கியதை அடுத்து, பிங்க் பந்து லைட் வெளிச்சத்தில் நன்றாக தெரிகிறதா? என்பது குறித்து அனைத்து வீரர்களிடம் கண்டிப்பாக கருத்து கேட்க வேண்டும் என்று வர்ணனையின்போது ஹர்ஷா போக்ளே தெரிவித்தார்.

ஹர்ஷா போக்ளேவின் இந்த கருத்துக்கு சஞ்சய் மஞ்சரேக்கர் முரண்பட, அந்த விவாதம் தொடர்ந்தது. இறுதியில் மஞ்சரேக்கரின் ஆணவமான கருத்துடன் அந்த விவாதம் சர்ச்சையில் முடிந்தது. மஞ்சரேக்கரின் ஆணவ பேச்சுக்கு ரசிகர்களும் நெட்டிசன்களும் கடும் கண்டனங்களை தெரிவித்துவருகின்றனர்.

ஹர்ஷா போக்ளே, அனைத்து வீரர்களிடம் பிங்க் பந்து லைட் வெளிச்சத்தில் கண்ணுக்கு தெரிகிறதா என்று கேட்க வேண்டும் என கூறியதும், அதற்கு மஞ்சரேக்கர் பதிலையும் அந்த விவாதத்தையும் பார்ப்போம்.

ஓவராக பேசியதால் ரசிகர்களிடம் வாங்கி கட்டி கொண்ட முன்னாள் வீரர் !! 3

ஹர்ஷா போக்ளே: லைட் வெளிச்சத்தில் பிங்க் பந்து கண்ணுக்கு நன்றாக தெரிகிறதா என்று அனைத்து வீரர்களிடமும் கருத்து கேட்க வேண்டும்.

சஞ்சய் மஞ்சரேக்கர்: அதற்கெல்லாம் அவசியமில்லை. ஸ்லிப்பில் நிற்கும் ஃபீல்டர்கள் கேட்ச் பிடிப்பதை வைத்தே பந்து நன்றாக தெரிகிறது என்பதை தெரிந்துகொள்ள முடிகிறது. எனவே பந்து கண்ணுக்கு தெரிகிறதா என்ற கேள்வி தேவையேயில்லை.

ஹர்ஷா போக்ளே: நான் இரு அணிகளில் உள்ள அனைத்து வீரர்களிடமும் பந்து கண்ணுக்கு தெரிகிறதா என்று கேட்கப்போகிறேன்.

சஞ்சய் மஞ்சரேக்கர்: வீரர்களிடம் நீங்கள் கேட்கலாம். ஆனால் கிரிக்கெட் ஆடிய அனுபவம் கொண்ட எங்களை போன்ற வீரர்களுக்கு களத்தில் என்ன நடக்கிறது என்ற சூழலை புரிந்துகொள்ள முடியும்.(மஞ்சரேக்கரின் தன்னடக்கமான இந்த கருத்துதான் சர்ச்சையானது)

ஓவராக பேசியதால் ரசிகர்களிடம் வாங்கி கட்டி கொண்ட முன்னாள் வீரர் !! 4

மஞ்சரேக்கரின் மண்டைக்கணமான கருத்துக்கு ரசிகர்களும் நெட்டிசன்களும் கடும் விமர்சனங்களை முன்வைத்துவருவதோடு, சமூக வலைதளங்களில் மஞ்சரேக்கரை காய்ச்சி எடுத்துவருகின்றனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *