இன்னும் என் பெயரை எப்பிடி எல்லாடா கலாய்க்க போறீங்க என நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ராஸ் டெய்லர் காமெடியாக தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, முதலில் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதன் இரண்டு போட்டியின் முடிவில், இரு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளது.
இந்நிலையில் இரு அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை கான்பூரில் நடக்கிறது. இந்நிலையில் இப்பொட்டிக்கான எந்த நெருக்கடியும் இல்லாமல் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள் கூலாக இருப்பதாக தெரிகிறது.
அந்த அணியின் அனுபவ வீரர் ராஸ் டெய்லர், தனது பெயரை தவறாக உச்சரிப்பது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில்,’ முதலின் என்னை சேவக் தார் ஜீ (ஹிந்தியில் துணி தைக்கும் டெய்லர்) என்றார், தற்போது வீடியோ கேம் ஒன்றில் டாலராக உள்ளேன், இன்னும் என் பெயர் எப்படி எல்லாம் மாறப்போகிறதோ தெரியவில்லை,’ என குறிப்பிட்டுள்ளார்.