உலகின் தலைசிறந்த 11 வீரர்களை தேர்வு செய்த சேன் வார்ன்; இரண்டு இந்திய வீரர்களுக்கு இடம்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஷேன் வார்ன் இன்ஸ்டாகிராம் நேரலையில் பேசினார். அப்போது தனது காலகட்டத்தில் விளையாடிய வீரர்களில் இருந்து சிறந்த உலக லெவன் அணியை தேர்வு செய்தார். அதில் சச்சின், சேவாக் என இரண்டு இந்திய வீரர்களை தேர்வு செய்தார்.
ஆஸ்திரேலிய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் 194 போட்டிகளில் விளையாடியுள்ள வார்ன், 293 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் கடந்த 1999 இல் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி உலகக்கோப்பை வெல்ல முக்கிய காரணமாக அமைந்தார். இவர், அந்த தொடரில் 20 விக்கெட் கைப்பற்றினார்.

குறிப்பாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஃபைனலில் வார்ன் 4 விக்கெட் வீழ்த்தினார். இன்று வரை உலகக்கோப்பை ஃபைனலில் சுழற்பந்துவீச்சாளர் அதிகபட்சமாக வீழ்த்திய விக்கெட் இதுதான்.
சேன் வார்ன் தேர்வு செய்த சிறந்த ஆடும் லெவன்;
விரேந்தர் சேவாக், சனத் ஜெயசூர்யா, சச்சின், பிரைன் லாரா, கெவின் பீட்டர்சன், குமார் சங்ககரா, ஆண்டிரு பிளின்டாப், வாசிம் அக்ரம், டேனியல் வெட்டோரி,, சோயிப் அக்தர், கர்ட்லே ஆம்புரூஸ்.