கோஹ்லிக்கு இரண்டு முகம் உள்ளது; ஆடம் ஜாம்பா ஓபன் டாக் !! 1

ஐபிஎல் டி.20 தொடரின் 13வது சீசன் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. கடந்த தொடர்களை விட இந்த வருடத்திற்கான தொடர் பெரும் குழப்பமாகவும், விறுவிறுப்பு இல்லாமலுமே நடந்து முடிந்துள்ளது.

கோஹ்லிக்கு இரண்டு முகம் உள்ளது; ஆடம் ஜாம்பா ஓபன் டாக் !! 2

கொரோனா அச்சுறுத்தல், ரசிகர்கள் இல்லாத மைதானம், பெரும்பாலான முக்கிய வீரர்கள் விலகல்.. என பல பிரச்சனைகளை கடந்த இந்த தொடர் நடந்து முடிந்துள்ள நிலையில், அடுத்த வருடத்திற்கான தொடர் வழக்கம் போல் ஏப்ரல் – மே மாதங்களிலேயே நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடந்து முடிந்த ஐபிஎல் தொடர் குறித்தும் முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் என பலரும் தொடர்ந்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கோஹ்லிக்கு இரண்டு முகம் உள்ளது; ஆடம் ஜாம்பா ஓபன் டாக் !! 3

இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பற்றி ஆடம் ஜாம்பா தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

2020 க்காண ஐபிஎல் போட்டி தொடரில் ஆடம் ஜாம்பா விராட்கோலி தலைமையிலான ஆர்சிபி அணியில் இடம் பெற்றார்.

லெக் ஸ்பின்னர் ஆன ஆடம் ஜாம்பா கேன் ரிச்சர்ட்சன்க்கு பதிலாக ஆர்சிபி அணியின் களமிறங்கினார். அவர் கூறியதாவது விராட் கோலி ஒரு மிகச் சிறந்த கேப்டன் மற்றும் பேட்ஸ்மேன் ஆவார் இவருடைய சிறப்பம்சமே இவருடைய ஆக்ரோஷமான ஆட்டம் தான்.

கோஹ்லிக்கு இரண்டு முகம் உள்ளது; ஆடம் ஜாம்பா ஓபன் டாக் !! 4

ஆக்ரோசமாக விளையாடுவதில் பேர் போனவர்களான ஆஸ்திரேலிய அணி வீரர்களுக்கே சவால் விடும் வகையிலும் சலைக்காமல் இந்திய அணி கேப்டன் விராட்கோலி ஈடு கொடுப்பார். இவர் எதிரணி வீரர்களை வம்பிலுப்பதில் பேர்போனவர். அதற்க்கு எதிர்மாறாக போட்டி முடிந்து விட்டால் இவரைப் போல் அமைதியான மற்றும் இயல்பான மனிதரை எங்கும் பார்த்திருக்க மாட்டோம். அந்த அளவுக்கு இவர் வீரர்களிடம் மிக கனிவாக பேசுவார்.

கோஹ்லிக்கு இரண்டு முகம் உள்ளது; ஆடம் ஜாம்பா ஓபன் டாக் !! 5

ஆடுகளத்தில் ஆக்ரோஷமாகவும் மற்றும் ஆடுகளுக்கு வெளியில் பணி போன்று மிகவும் மென்மையாக பழகுவார். என்று ஆடம் ஜாம்பா விராட் கோலி பற்றி கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய அணியும், மூன்று டி.20 போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.

கடந்த முறை ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் கோலி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பேட்டிங்கில் மட்டும் அல்லாமல் தனது கேப்டன்ஷிப் திறமையையும் வெளிப்படுத்தினர்.

கோஹ்லிக்கு இரண்டு முகம் உள்ளது; ஆடம் ஜாம்பா ஓபன் டாக் !! 6

சர்வதேச போட்டிகளி ல்ஆடம் ஜாம்பாவிடம் இதுவரை ஏழு முறை கோலி அவுட் ஆகிவுள்ளார் என்பது குறிப்பிடவேண்டிய விஷயமாகும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *