ஒரே பந்தில் இரண்டு விக்கெட் சாத்தியமா? நிகழ்த்தி காட்டிய பங்களாதேஷ் வீரர் 1

ஆப்கானிஸ்தான் அணிக்கு டெஸ்ட் அந்தஸ்த்து கிடைத்தபின் ஒரு டெஸ்ட் போட்டி இந்தியாவுடன் ஆடுவதற்கு பிசிசிஐ நிர்வாகம் முடிவெடுத்தது. அதை தொடர்ந்து பிசிசிஐ டெஹ்ராடூன் மைதானத்தை ஆப்கானிஸ்தான் அணிக்காக அறிவித்தது.

ஒரே பந்தில் இரண்டு விக்கெட் சாத்தியமா? நிகழ்த்தி காட்டிய பங்களாதேஷ் வீரர் 2

ஜூன் 14ம் தேதி இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகள் பெங்களூருவில் சின்னசாமி மைதானத்தில் போட்டியிடுகின்றன. அதற்கு முன்னதாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்களாதேஷ் உடன் மோதவிருக்கின்றன.

இதன் முதல் டி20 போட்டி நேற்றைய தினம் ராஜிவ் காந்தி மைத்தனத்தில் நடைபெற்றது. முதலில் டாஸ் வென்று பந்துவீச முடிவு செய்தார் பங்களாதேஷ் அணி கேப்டன் சாகிப் அல் ஹாசன். நல்ல துவக்கமாக அமைந்தது. 6 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 44 ரன்கள் எடுத்தது. அணியின் துவக்க வீரன் உஸ்மான் கானி 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்பு மெல்ல மெல்ல விக்கெடுகள் சரியா துவங்க. 16 ஒவர்களில் 100 ரன்களை தட்டுத்தடுமாறி எட்டியது.

ஒரே பந்தில் இரண்டு விக்கெட் சாத்தியமா? நிகழ்த்தி காட்டிய பங்களாதேஷ் வீரர் 3
Asghar Stanikai and Shahzad Mohammadi of Afghanistan in action during the Twenty20 match vs bangladesh in rajiv gandhi international stadium

அடுத்து பவுண்டரி மழைகளாக பொழிய 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் குவித்தது. ஒருகட்டத்தில் தடுமாறிக்கொண்டிருந்த அந்த அணி கடைசி நான்கு ஒவர்களில் 4 விக்கெடுகள் இழந்த போதிலும் 67 ரன்கள் சேர்த்தது, இது அந்த அணிக்கு நல்ல ஸ்கோரை எட்ட மிகவும் உதவிகரமாக இருந்தது.

ஒரே பந்தில் இரண்டு விக்கெட்.

ஒரே பந்தில் இரண்டு விக்கெட் சாத்தியமா? நிகழ்த்தி காட்டிய பங்களாதேஷ் வீரர் 4

பங்களாதேஷ் அணியில் அபுல் ஹாசன் 20 வது ஓவர் வீசினார். அந்த ஓவரின் 5 வது பந்து அகலபந்தாக செல்ல ரஷீத் கான் ரன் ஓட முயற்சித்தார். மறுமுனையில் ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் கடக்க முடியாமல் ரன் அவுட் ஆகினார். அடுத்த பேட்ஸ்மேனாக கரீம் களமிறங்கனார். அவர் வந்த முதல் பந்திலேயே தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். இதன் மூலம் 19.5 வது ஓவரில் பங்களாதேஷ் அணிக்கு இரண்டு விக்கெடுகள் கிடைத்தது.

167 ரன் இலக்கை துரத்திய பங்களாதேஷ் அணி, தொடக்க வீரர் தமீம் வந்த முதல் பந்திலேயே அவுட் ஆகி வெளியேறினார். மோசமான துவக்கமாக அமைந்தது. ஒரு முனையில் லீடோன் தாஸ் நன்றாக ஆடிக்கொண்டிருந்தாலும் மறுமுனையில் விக்கெடுகள் சரிந்து கொண்டே இருந்தன. 8 வது ஓவரில் அவரும் வெளியேற ஆப்கானிஸ்தான் அணி வெற்றியை எளிதாக நெருங்கி கொண்டிருந்தனர். கடைசி 5 ஒவர்களில் 64 ரன்கள் வேண்டும் என்ற கடின இலக்கை துரத்திக்கொண்டிருக்க, 18வது ஓவரை ரஷீத் கான் வீச அந்த அணி கேப்டன் பணித்தார்.

ஒரே பந்தில் இரண்டு விக்கெட் சாத்தியமா? நிகழ்த்தி காட்டிய பங்களாதேஷ் வீரர் 5

ரஷீத் ஓவரில் அடுத்தடுத்து மூன்று விக்கெடுகள் சரிய 45 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி பங்களாதேஷ்யை வீழ்த்தியது

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *