Cricket, Umesh Yadav, India, Mohammad Shami

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான உமேஷ் யாதவின் வீட்டில் இருந்து 45 ஆயிரம் ரூபாய் மற்றும் செல்போன் திருட்டு போய் உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ். இவர் தனது மனைவி மற்றும் அம்மா உடன் நாக்பூர் லட்சுமிநகர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 9-வது தளத்தில் வசித்து வருகிறார். நேற்று இரவு தனது குடும்பத்துடன் வெளியில் சென்றுள்ளார்.

பின்னர் வீடு திரும்பியபோது, வீட்டின் ஜன்னல் ஒன்று உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டிற்குள் சென்று பார்க்கும்போது மனைவியின் பர்ஸில் இருந்து 45 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் அவரது அம்மாவின் செல்போன் ஆகியவற்றை மர்ம மனிதர்கள் திருடிச் சென்றுள்ளது தெரியவந்தது. இதுகுறித்து போலீசாருக்கு விடியற்காலை 3.30 மணியளவில் தகவல் கொடுத்துள்ளர்.

இதுகுறித்து விசாரணை நடத்தி வரும் போலீசாருக்கு, 8-வது மாடியில் உள்ள ஒரு வீட்டில் பழுது பார்க்க வந்த இரண்டு தொழிலாளர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர்களில் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொல்கத்தாவில் இருர நாட்கள் முன்பு, மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மூன்று வாலிபர்களால் தாக்கப்பட்டார். இந்த நிலையில் உமேஷ் யாதவ் வீட்டில் கொள்ளைபோயுள்ளது.

ரிசர்வ் வங்கியில் உமேஷ் யாதவுக்கு கவுரவ பதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *