நீங்கல்லாம் அம்பயாரா இல்ல தோனி ஃபேனாடா... தோனிக்கு சாதகமாக நடுவர்கள் நடக்கிறார்கள் - புதிய சர்ச்சையை கிளப்பிய முன்னாள் ஆஸி வீரர்! 1

பத்திரனா இப்போது பந்துவீசமுடியாது என நடுவர்கள் கூறியதற்கு, கேப்டன் என்கிற முறையில் பேசி சரிசெய்தார் தோனி. இந்த விஷயத்தை குறிப்பிட்டு புதிய சர்ச்சையை கிளப்ப முயற்சித்துள்ளார் முன்னாள் ஆஸி., வீரர் பிராட் ஹாக்.

இந்த வருட ஐபிஎல் சீசன் லீக் போட்டிகள் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்கள் பிடித்த குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் முதல் குவாலிபயர் போட்டியில் விளையாடினர். போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 172 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக ருத்துராஜ் 60 ரன்கள் அடித்துக் கொடுத்தார். நிதானமாக விளையாடிய டெவான் கான்வெ 40 ரன்கள் அடித்தார்.

நீங்கல்லாம் அம்பயாரா இல்ல தோனி ஃபேனாடா... தோனிக்கு சாதகமாக நடுவர்கள் நடக்கிறார்கள் - புதிய சர்ச்சையை கிளப்பிய முன்னாள் ஆஸி வீரர்! 2

பின்னர் பந்துவீசிய சிஎஸ்கே அணி பவர்-பிளே ஓவர்களில் குஜராத் பேட்ஸ்மேன்களை கட்டுக்கோப்பாக வைத்து விக்கெட்டுகளையும் எடுத்தது. மிடில் ஓவர்களில் இன்னும் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தி குஜராத் அணிக்கு பிரஷர் கொடுத்தது.

போட்டியின் 16ஆவது ஓவரை பத்திரனா பந்துவீச வந்தார். அப்போது நடுவர் பந்துவீச முடியாது என்று தடுக்க உடனடியாக தோனி தலையிட்டு நடுவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் பந்துவீசுவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டது. இதனால் ஆட்டம் 8 நிமிடங்கள் தாமதம் ஆனது.

நீங்கல்லாம் அம்பயாரா இல்ல தோனி ஃபேனாடா... தோனிக்கு சாதகமாக நடுவர்கள் நடக்கிறார்கள் - புதிய சர்ச்சையை கிளப்பிய முன்னாள் ஆஸி வீரர்! 3

பத்திரனா, கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் பீல்டிங்கில் இல்லாமல் வெளியே இருந்துவிட்டு நேரடியாக பந்துவீசுவதற்கு உள்ளே வந்திருக்கிறார். இதனால் தான் நடுவர்கள் பந்துவீசவிடாமல் தடுத்திருக்கின்றனர். பின்னர் தோனி பேசிய பிறகு அனுமதி கொடுக்கப்பட்டு, 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணியும் 157 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.  இறுதியில் சிஎஸ்கே அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பைனலுக்கும் முன்னேறியது.

தோனி மற்றும் நடுவருக்கு இடையே நடந்த பேச்சு வார்த்தையில் தோனி தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி பந்துவீச வைத்திருக்கிறார் என்கிற கருத்தை முன் வைத்துள்ளார் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹாக்.

நீங்கல்லாம் அம்பயாரா இல்ல தோனி ஃபேனாடா... தோனிக்கு சாதகமாக நடுவர்கள் நடக்கிறார்கள் - புதிய சர்ச்சையை கிளப்பிய முன்னாள் ஆஸி வீரர்! 4

“தோனி தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி கிட்டத்தட்ட பிரேக்கை தாண்டி நிமிடங்களுக்கு மேல் ஆட்டத்தை நிறுத்தி வைத்து பேசியுள்ளார். மேலும் இந்த சூழலில் நடுவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி யோசிக்காமல், அங்கே சிரித்துக் கொண்டு நிற்கிறார்கள். இந்த சூழலை அவர்களும் முறையாக கையாளவில்லை. இது முற்றிலும் நியாயமற்றது.” என்கிற வகையில் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *