9.ஏ.பி.டி வில்லியர்சின் 31 பந்து சதம்
கடந்த 2015 ஆண்டு ஜனவரி மாதம் நடந்த வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்கவிற்கு எதிரான போட்டியில் தனது ருதர தாண்டவத்தைக் காட்டினார் அதிரடி மன்னன் டி வில்லியர்ஸ். அப்போது வரை 1996ல் அஃப்ரிடி 37 பந்துகளில் அடித்த சதமும், 2014ல் நியூசிலாந்தின் கோரி ஆண்டர்சன் அடித்த 36 பந்து சதம் இரண்டு மட்டுமே சர்வதேச அளவில் அதிவேக சதமாக இருந்தது. அப்போது இந்த சதங்களை வீழ்த்துவது முடியாத காரியம் என்று பலரும் என்ன, அதனைத் தகர்த்தார் ஏ.பி.டி. வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சாளர்களை நாளா புறமும் தெரிக்க விட்டு 31 பந்துகளில் சதம் கண்டார். இந்த சாதனையும் தகர்க்க முடியாதபடியே பார்க்கப்படுகிறது.