7.லாராவின் டெஸ்ட் 400 ரன்
வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா டெஸ்ட் போட்டிகளின் ஒரே இன்னிங்சில் முதன் முதலாக 400 ரன் அடித்திருக்கிறார். இந்த சாதனையும் 13 வருடங்களாகியும் இன்று வரை முறியடிக்கப்படாமல் இருக்கிறது.வ்கிரிக்கெட் வரலாற்றில் முதல் அற்புதமான இடது கை பேட்ஸ்மேன் பிரையன் சார்லஸ் லாரா. 2004 ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்திற்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் இந்த சாதனையைப் படைத்தார் லாரா.
அந்த டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டனாக இருந்தார் லாரா. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 778 பந்துகள் களத்தில் இருந்த லாரா 400 ரன் அடித்து டிக்லேர் செய்தார். இந்த ஆட்டத்தில் 43 ஃபோர்களும் 4 சிக்சர்களும் அடங்கும். தற்போதைய அதிரடி ஆட்டக்காலத்தில் 3 வெகு சீக்கிரமாக டெஸ்ட் போட்டிகளை முடிக்க நினைக்கும் மன நிலையில் உள்ளனர் வீரர்கள். அதிக இரட்டை சதங்கள் இந்த காலகட்டத்தில் அடிக்கப்படுகிறதோ தவிற முச்சசத்தைக் கூட எந்த ஒரு வீரரும் எண்ணிப்பார்ப்பதில்லை. இது போன்று 400 ரன்கள் அடிப்பது கிரிக்கெட்டின் ஒரே ஒரு சாதனையாகவே இன்று வரை இருக்கிறது.