4.ஜாக்குவஸ் காலிஸ் 25534 ரன் மற்றும் 577 விக்கெட்
கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த ஆல் ரவுண்டர் தென்னாப்பிரிக்காவின் ஜாக்குவஸ் காலிஸ். டெஸ்ட் போட்டிகளில் இவருடைய கிரிக்கெட் புள்ளி விவரங்களைப் பார்க்கும் போது சச்சின் மற்றும் ட்ராவிட் ஆகிய இருவருக்கும் சேர்த்து வைத்தாற் போல் இருக்கும்.சர்வதேச அளவில் காலிஸ் 25534 ரன்களையும் 577 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இவரைப் போன்று ஒரு ஆல் ரவுண்டர் இவர் ஒருவரே.