டெஸ்ட் போட்டிகள் துவங்கி கிட்டத்தட்ட 130 வருடங்கள் ஆகிறது. கிரிக்கெட்டும் தன் காலத்திற்கு ஏற்றார் போல் தன் அமைப்பையும் வரையறையையும் மாற்றிக்கொண்டே வருகிறது. அதே போல் தான் டெஸ்ட் போட்டிகளை மாற்ற ஒருநாள் போட்டிகள் வந்தது. ஒருநாள் போட்டிகளையும் மாற்ற டி20 போட்டிகள், தற்போது புதிய முயற்சியாக டி10 போட்டிகளும் வந்துவிட்டது.
இருந்தும் 5 நாள் டெஸ்ட் போட்டிக்கான ஒரு தரம் எப்போதும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. 5 நாள் போராடி 5ஆவது நாளின் கடைசி 5 நிமிடத்தில் போட்டியை விட்ட அணிகள் இங்கு ஏறாலம். அதே போல், அந்த டெஸ்ட் போட்டிகளில் முறியடிக்க முடியாத பல சாதனைகள் உள்ளன. அவற்றை தற்போது காண்போம்.
11.ஆலன் பார்டரின் தொடர்ச்சியான 153 டெஸ்ட் போட்டிகள்
எப்படி ஒரு கிரிக்கெட் வீரராக இருந்தாலும் ஒரு டெஸ்ட் போட்டிக்கு 3 நாட்களாவது ஓய்வு வேண்டும். அப்படி இருந்தும் ஏதவாது ஒரு வகையில் வீரர்கள் காயமடைந்ந்து விடுகின்றனர். ஒரு சாதரான சர்வதேச கிரிக்கெட் வீரர் சராசரியாக 30 டெஸ்ட் போட்டிகள் தொடர்ச்சியாக ஆடலாம். ஆனால், ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஆலன் ராபர்ட் பார்டர் தொடர்ச்சியாக ஆஸ்திரேலிய அணி விளையாடிய 156 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இப்படியான் ஒரு சாதனைக்க்கு சரியான உடல் தகுதியும் கமிட்மென்ட்டும் தேவை. தனது 16 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் 156 டெஸ்ட் போட்டிகள் தொடர்ச்சியாக ஆடியுள்ளார் ஆலன். தற்போது வரை இதுவே ஒரு வீரர் தொடர்ச்சியாக அதிக சர்வதேச டெஸ்ட் போட்டிகளை ஆடிய சாதனையாக உள்ளது.