6. விக்கெட் கீப்பராக அதிக டிஸ்மிசல்ஸ்
தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மார்க் பௌச்சர் கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த கீப்பர்களில் ஒருவர். 1997ஆம் ஆண்டில் இருந்து 2012வரை தென்னாப்பிரிக்க அணிக்காக 15 வருடங்கள் 147 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார் பௌச்சர். கேட்ச்,ஸ்டம்பிங் என மொத்தம் 555 டிஸ்மிசல் செய்துள்ளார் பௌச்சர். 532 கேட்சுகளும் 23 ஸ்டம்பிங்குகளும் செய்துள்ளார் பௌச்சர். பின்னர் 2012ஆம் ஆண்டு ஒர் முதல் தரப் போட்டியின் போது கீப்பிங் செய்யும் போது ஸ்டம்பின் பெய்ல்ஸ் அவரது கண்ணில் பட்டு பார்வையில் பிரச்சனை ஏற்ப்பட பின்னர் தனது ஓய்வினை அறிவித்துவிட்டர் பௌச்சர்.