4. ஃபீல்டராக ட்ராவிட் பிடித்த அதிகபட்ச கேட்சுகள்
இந்திய அணியின் சுவராக வர்ணிக்கப்பட்டவர் ராகுல் ட்ராவிட். அவரது அமைதியான தடுப்பட்டத்திற்கு பெயர் போனது மட்டுமில்லாமல் ஸ்லிப்பில் நின்று வரும் கேட்சுகளை அல்லுவதில் வல்லவர். ஃபீல்டராக மட்டும் ராகுல் ட்ராவிட் மொத்தம் 210 கேட்சுகள் பிடித்துள்ளார். தற்போது வரை இந்த சாதனையை டெஸ்ட் போட்டிகளில் எந்த ஒரு வீரரும் நெருங்க இயலவில்லை.