Cricket, Bangladesh, India, U19 Asia Cup

தற்போது மலேசியாவில் 19 வயதிற்கு உட்பட்டோர்க்கான கிரிக்கெட் அணிகளுக்கு ஆசிய கோப்பை நடந்து வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. ஞாயிற்றுகிழமை அன்று நேபாள அணியிடம் இந்திய அணி தோல்வி பெற்றது. ஒரு நாள் இடைவெளிக்கு பிறகு இன்று (செவ்வாய்க்கிழமை) வங்கதேச அணியிடம் 8-விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி பெற்றது.

இந்த போட்டியின் மழை குறிக்கிட்டதால், இந்திய அணிக்கு அதிர்ச்சி கொடுத்தது வங்கதேச அணி. வங்கதேச அணி ஹிமான்ஷு ராணா தலைமையிலான இந்திய அணியை அசால்ட்டாக வீழ்த்தி 28 ஓவரில் 188 ரன் அடித்து வெற்றி பெற்றது.

இந்த தோல்வியால் அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்துவிட்டது இந்திய அணி. A பிரிவில் 4 புள்ளிகள் கொண்டிருக்கும் நேபாள அணி இரண்டாவது இடத்திலும், 6 புள்ளிகள் கொண்டிருக்கும் வங்கதேச அணி முதல் இடத்திலும் உள்ளது.

Under-19 Asia Cup 2017, India, Bangladesh, Malaysia, Kaula Lampur, Nepal, Semi-final, Pinak Gosh

18-வயது இடது கை தொடக்க வீரர் பினக் கோஷ் அற்புதமாக விளையாடி 77 பந்துகளில் 81 ரன் அடித்தார். அவரது இன்னிங்சில் ஆறு பவுண்டரி மற்றும் மூன்று சிக்ஸர்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னொரு பக்கம், வலது கை பேட்ஸ்மேன் டோவிட் ரிடாய் 32 பந்துகளில் 47 ரன் அடித்து அவுட் ஆகாமல் இருந்தார். தனது இன்னிங்சில் நான்கு சிக்ஸர் மற்றும் இரண்டு பவுண்டரிகளை விளாசினார் ரிடாய். அந்த இலக்கை சேஸ் செய்யும் போது 13வது ஓவரில் 82 ரன்னில் இருக்கும் போது முதல் விக்கெட்டை இழந்தது வங்கதேசம். 17.5வது ஓவரில் 108 ரன்னில் இருக்கும் போது இன்னொரு விக்கெட்டையும் இழந்தது வங்கதேசம்.

இந்திய அணி தரப்பில், ஐந்து ஓவர்கள் வீசிய மந்தீப் சிங் 36 ரன்கள் கொடுத்து அந்த இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். ஹாசன் 16 ரன்னும், தொடக்கவீரர் நைம் ஷேக் 38 ரன்னும் அடித்தார்கள். நைம் ஷேக் மூன்று பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர்களை விளாசினார்.

Under-19 Asia Cup 2017, India, Bangladesh, Malaysia, Kaula Lampur, Nepal, Semi-final, Pinak Gosh

தொடக்கத்தில் மழை குறிக்கிட்டதால் போட்டியை 32 ஓவராக மாற்றினார்கள். கொடுக்கப்பட்ட 32 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 187 ரன் அடித்தது இந்திய அணி.

வங்கதேச அணி தரப்பில் ஆறு ஓவர் வீசிய ரோபில் ஹக் மூன்று விக்கெட் எடுத்தார். அபிப் ஹொசைன் மற்றும் நயீம் ஹசன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட் எடுத்தார்கள். தொடர்ந்து இந்திய அணி இரண்டு தோல்விகளை சந்தித்தது. நவம்பர் 12 அன்று நேபாள அணியிடம் 19 ரன் வித்தியாசத்தில் தோல்வி பெற்றது. இன்று (நவம்பர் 14) 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி பெற்றது.

நவம்பர் 10 ஆம் தேதி தொடங்கிய இந்த ஆசிய கோப்பை தொடர், நவம்பர் 19ஆம் தேதி அன்று முடிகிறது.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *