நீங்க வேணும்னா பாருங்க.. நான் சொல்ற இந்த 4 டீம் தான் ஐபிஎல் பிளே-ஆப் செல்லும் - கணிப்பை சொன்ன யுனிவர்சல் பாஸ்! 1

உறுதியாக சொல்கிறேன், இந்த நான்கு அணிகள் தான் ஐபிஎல் பிளே-ஆப் சுற்றுக்கு செல்லும் என்று தனது கணிப்பை கூறியுள்ளார் யுனிவர்சல் பாஸ் கிறிஸ் கெயில்.

ஐபிஎல் போட்டிகளின் 16ஆவது சீசன் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கோலாகலமாக துவங்கியுள்ளது. முதல் போட்டியில் பலம்மிக்க நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியை நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிக்கொண்டது.

நீங்க வேணும்னா பாருங்க.. நான் சொல்ற இந்த 4 டீம் தான் ஐபிஎல் பிளே-ஆப் செல்லும் - கணிப்பை சொன்ன யுனிவர்சல் பாஸ்! 2

கடந்த சீசனில் முதல்முறையாக சேர்க்கப்பட்ட லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு சென்றன. அதில் குஜராத் டைட்டன்ஸ் அணி கோப்பையையும் வென்றதால் இந்த இரண்டு அணிகள் மீது பலரும் கவனம் செலுத்தி வருகின்றனர்.

அதேபோல் மீண்டும் பழைய முறைப்படி உள்ளே வெளியே என போட்டிகள் நடைபெறுவதால் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் போன்ற அணிகளின் மீதும் கவனம் சென்றுள்ளது. சொந்த மைதானங்களில் இவர்கள் எத்தகைய பலம் மிக்கவர்கள் என்பதை பலரும் அறிவோம்.

நீங்க வேணும்னா பாருங்க.. நான் சொல்ற இந்த 4 டீம் தான் ஐபிஎல் பிளே-ஆப் செல்லும் - கணிப்பை சொன்ன யுனிவர்சல் பாஸ்! 3

இவர்கள் ஒருபுறம் இருக்க, முன்னாள் வீரர்கள், விமர்சகர்கள் பலர் எந்த அணி கோப்பையை தட்டிச்செல்லும்? எந்தெந்த அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்கள் பிடித்து விளையாட்டு பிளே-ஆப் செல்வர்? என்று கணிப்புகளை வெளியிட்டு வருகிறார்கள்.

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் லெஜெண்ட் மற்றும் டி20 போட்டிகளில் யுனிவர்சல் பாஸ் என்று அழைக்கப்படும் கிறிஸ் கெயில், கடந்த ஐபிஎல் சீசன் முதல் ஓய்வு பெற்றார். இந்த வருடம் முதல்முறையாக ஐபிஎல் போட்டிகளுக்கு கமெண்டரி செய்கிறார். இவர் இந்த ஐபிஎல் சீசனில் எந்த நான்கு அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு செல்லும் என்று கணிப்பை கூறியுள்ளார்.

“புதிதாக ஐபிஎல் கிரிக்கெட்டில் இணைந்துள்ள இரண்டு அணிகளும் சிறப்பாக தெரிகிறது. ஆகையால் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய இரண்டு அணிகளும் நிச்சயம் பிளே-ஆப் செல்லும்.

நீங்க வேணும்னா பாருங்க.. நான் சொல்ற இந்த 4 டீம் தான் ஐபிஎல் பிளே-ஆப் செல்லும் - கணிப்பை சொன்ன யுனிவர்சல் பாஸ்! 4

மும்பை அணியில் பும்ரா இல்லாதது சற்று பின்னடைவை தந்திருந்தாலும், அணியில் புதிதாக வந்திருக்கும் ஆல்ரவுண்டர்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் பலம்மிக்கதாக தெரிகின்றனர். ஆகையால் மும்பை அணிக்கு இந்த வருடம் பிளே-ஆப் சுற்றில் வாய்ப்பு இருக்கிறது. சென்னை மற்றும் ராஜஸ்தான் இரண்டு அணிகளும் பேலன்ஸ் நிறைந்ததாக தெரிந்தாலும், ராஜஸ்தான் அணிக்கு கூடுதல் வாய்ப்பு இருப்பதாக பார்க்கிறேன். இந்த நான்கு அணிகளும் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என்று கணிக்கிறேன்.” என கூறினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *