போன சீசன் ஆர்சிபி-க்கு கலக்கிய வீரர்.. இந்த ஐபிஎல் சீசனிலிருந்து மொத்தமாக விலகல்..! - புதிய பிரச்சினையில் மாட்டிக்கொண்ட ஆர்சிபி! 1

ஆர்சிபி அணியின் நம்பர் 3 பேட்ஸ்மேன் ரஜத் பட்டிடார், காயம் காரணமாக இந்த வருட ஐபிஎல் தொடரில் இருந்து மொத்தமாக விலகியுள்ளார்.

ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கடந்த மார்ச் 31ஆம் தேதி கோலாகலமாக துவங்கியது. அனைத்து அணிகளும் தங்களது முதல் போட்டியை விளையாடி முடித்துவிட்டன. சிஎஸ்கே மற்றும் லக்னோ அணிகள் தலா இரண்டு போட்டிகளில் விளையாடி முடித்துவிட்டன. இரு அணிகளும் தலா ஒரு வெற்றி ஒரு தோல்வியை அடைந்திருக்கிறது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தனது முதல் போட்டியை பெங்களூரு மைதானத்தில் கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு பிறகு விளையாடியது. இதில் விராட் கோலி மற்றும் டு ப்ளசிஸ் இருவரும் அபாரமாக விளையாடி 16.2 ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயித்த இலக்கை எட்டி, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

போன சீசன் ஆர்சிபி-க்கு கலக்கிய வீரர்.. இந்த ஐபிஎல் சீசனிலிருந்து மொத்தமாக விலகல்..! - புதிய பிரச்சினையில் மாட்டிக்கொண்ட ஆர்சிபி! 2

அப்போட்டியில் ஆர்சிபி அணிக்கு வழக்கமாக மூன்றாவது இடத்தில் களமிறங்கும் ரஜத் பட்டிடார் காயம் காரணமாக பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை. நம்பர் 3 இடத்தில் தினேஷ் கார்த்திக் களமிறங்கினார்.

இந்நிலையில் குதிகால் பகுதியில் காயம் ஏற்பட்டு வெளியில் இருந்த ரஜத் பட்டிடார் காயம் பற்றிய அப்டேட் ஏப்ரல் 4ஆம் தேதி வந்தது. அதில் ரஜத் பட்டிடார் காயம் குணமடைவதற்கு இன்னும் சில வார காலங்கள் ஆகும் என தெரியவந்திருக்கிறது. ஆகையால், இந்த வருட ஐபிஎல் தொடரிலிருந்து மொத்தமாக விலகுகிறார் என ஆர்சிபி அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

போன சீசன் ஆர்சிபி-க்கு கலக்கிய வீரர்.. இந்த ஐபிஎல் சீசனிலிருந்து மொத்தமாக விலகல்..! - புதிய பிரச்சினையில் மாட்டிக்கொண்ட ஆர்சிபி! 3

ரஜத் பட்டிடார், கடந்த ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணிக்கு மாற்று வீரராக பாதியில் உள்ளே வந்தார்.  அபாரமாக விளையாடி 333 ரன்கள் குவித்தார். குறிப்பாக, எலிமினேட்டர் போட்டியில் ஆர்சிபி அணிக்கு சதம் அடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

இந்த வருடம் உள்ளூர் போட்டிகளில் மிகச்சிறந்த பார்மில் இருந்து வந்த ரஜத் பட்டிடார், இந்திய டி20 அணியிலும் முதன்முறையா இடம் பிடித்தார். இப்படிப்பட்ட நல்ல பார்மில் இருந்து வந்த இவர் ஐபிஎல் துவங்குவதற்கு முன்பாக ஆர்சிபி அணிக்கு பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது காலில் காயம் ஏற்பட்டிருக்கிறது. இதற்காக, இந்திய தேசிய அகடமிக்கு சென்று சிகிச்சையும் பெற்று வந்தார்.

காயம் குணமடைய தாமதம் ஆகும் என்பதால், ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். இதனால்  ஆர்சிபி அணியின் பேட்டிங் வரிசையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 3ஆவது இடத்தை நிரப்புவதற்கு அணியில் ஏற்கனவே சில வீரர்கள் இருந்தாலும், இவர் நல்ல பார்மில் இருந்த ரஜத் பட்டிடாரை  ஆர்சிபி அணி கண்டிப்பாக மிஸ் செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை.

போன சீசன் ஆர்சிபி-க்கு கலக்கிய வீரர்.. இந்த ஐபிஎல் சீசனிலிருந்து மொத்தமாக விலகல்..! - புதிய பிரச்சினையில் மாட்டிக்கொண்ட ஆர்சிபி! 4

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *