ஐக்கிய அமெரிக்க நாடுகள் மற்றும் ஓமன் இரு நாடுகளுக்கும் ஒருநாள் போட்டிகளில் சர்வதேச அந்தஸ்து வழங்கியது ஐசிசி வாரியம்.
ஒவ்வொரு ஆண்டும் ஐசிசி நடத்தும் உலக கிரிக்கெட் டிவிசன் லீக் போட்டிகளை நடத்தும். இப்போட்டியில் சர்வதேச அந்தஸ்து பெறாத நாடுகள் பங்கேற்கும், டிவிஷன் 2 லீகில் புள்ளி பட்டியலில் சிறப்பாக ஆடி முன்னிலை பெறும் நாடுகளுக்கு ஐசிசி நிர்வாகம் ஒரு வரையான சர்வதேச அந்தஸ்துகளை வழங்கும். சர்வதேச அந்தஸ்து பெற்ற அணிகள் உலககோப்பை குவாலிபயர் லீக் போட்டிகளில் பங்கேற்று அதிலும் தகுதி பெற்றால் உலக கோப்பையில் ஆடலாம்.
இந்த ஆண்டு நடைபெற்ற டிவிஷன் 2 உலக கிரிக்கெட் போட்டிகளில் முதல் மூன்று லீக் போட்டிகளில் அமெரிக்கா, கனடா மற்றும் ஹாங்காங் ஆகிய அணிகளை வீழ்த்தி 2022 உலகக் கோப்பை குவாலிபயர் வரை சர்வதேச அந்தஸ்து பெற்றது ஓமன் அணி.

அதேபோல அமெரிக்க அணி, முதல் போட்டியில் லீக் போட்டியில் ஓமன் அணியிடம் தோல்வியைத் தழுவியது அதன்பிறகு பப்புவா நியூ கோயினா, ஹாங்காங் மற்றும் நமீபியா ஆகிய அணிகளை வீழ்த்தி 2022 உலகக் கோப்பை குவாலிபயர் சர்வதேச அந்தஸ்து பெற்றது.
இந்த லீக் போட்டிகளில் முதல் நான்கு இடத்தை பிடிக்கும் அணி, இரண்டாவது லீக் போட்டிகளில் நேபால், ஸ்காட்லாந்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் அணிகளுடன் ஆடும்.

ஒருநாள் போட்டிகளில் இதுவரை 12 அணிகள் நிரந்தர சர்வதேச அந்தஸ்து பெற்றுள்ளன. மேலும், நான்கு அணிகள் நிபந்தனையுடன் கூடிய வரையறை கொண்ட சர்வதேச அந்தஸ்தை பெற்றுள்ளன. இந்த அணிகளுடன் தற்போது ஓமன் மற்றும் அமெரிக்கா இரு அணிகளும் வரையறை கொண்ட சர்வதேச அந்தஸ்து பெற்று உள்ளனர்.
இந்த வரையறையானது வரும் ஏப்ரல் 27-ஆம் தேதி துவங்கி 2022ஆம் ஆண்டு உலக கோப்பை குவாலிபயர் வரை இருக்கும்.