இந்த ஐ.பி.எல் தொடரில் என்னுடைய ஒரே இலக்கு இது தான் ; வருன் ஆரோன் கெத்து பேச்சு
எதிர்வரும் ஐ.பி.எல் தொடரில் தனது இலக்கு என்ன என்பதனை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் வருன் ஆரோன் ஓபனாக தெரிவித்துள்ளார்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடர் மூலம் இந்திய அணிக்கு அறிமுகமான வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன், தனது வேகத்தின் மூலம் எதிரணிகளை சிதற வைத்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாள்ர்களின் சராசரி வேகம் 140 கி.மி என்று இருக்கையில், 153 கி.மீ வேகத்தில் பந்து வீசக்குடிய திறன் பெற்றிருந்த வருன் ஆரோனை கண்டு சில காலம் அனைத்து அணிகளும் பயந்தன.
ஆனால் வருண் ஆரோன் புகழின் உச்சிக்கு சென்று கொண்டிருந்த அதே நேரத்தில் அவரை காயங்களும் துரத்த ஆரம்பித்ததால், கடந்த 2015ம் ஆண்டிற்கு பிறகு இப்பொழுவது வரை இந்திய அணியில் இடம்பிடிக்க முடியாமல் ஆரோன் தவித்து வருகிறார்.
ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் வருன் ஆரோன், எதிர்வரும் ஐ.பி.எல் தொடரில் தனது இலக்கு என்ன என்பதனை ஓபனாக தெரிவித்துள்ளார்.
ஈ.எஸ்.பி.என் கிரிக்கெட் இணையதளத்திற்கு வருன் ஆரோன் அளித்த பேட்டி ஒன்றில் இது குறித்து கூறுகையில், “இந்த ஐ.பி.எல் தொடரில் 16 விக்கெட்டுகளுக்கு அதிகமாக எடுக்க வேண்டும் என்பதே எனது ஒரே இலக்காக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 2014ம் ஆண்டு தொடரில் பெங்களூர் அணிக்காக விளையாடிய வருன் ஆரோன், அந்த தொடரில் பெங்களூர் அணிக்காக 16 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார், தற்பொழுது அதனை முறியடித்து இந்த தொடரில் கூடுதலாக ஒரு விக்கெட்டாவது கைப்பற்றிவிட வேண்டும் என்பதை தான் வருன் ஆரோன் இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.