வருன் சக்கரவர்த்திக்கு டும் டும் ! நீண்டகால தோழியை மணந்தார்! புகைப்படங்கள் இங்கே..,
தனது 25 வயது வரை ஒரு கட்டிடக்கலை நிபுணராக இருந்து, அதன் பின்னர் வேகப்பந்து வீச்சாளராக மாறி தற்போது ஒரு மாயாஜால சுழற்பந்து வீச்சாளராக இருப்பவர் வருண் சக்கரவர்த்தி. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற 13வது ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி இருக்கிறார். இவர் தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் ஆவார். டிஎன்பிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தின் மூலம் முதலில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடி வருகிறார்.
சமீபகாலமாக தமிழகத்தில் இருந்து ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் அதிகரித்து வருகின்றனர். நடராஜன், முருகன் அஸ்வின், வரும் சக்கரவர்த்தி போன்ற பல வீரர்கள் தற்போது விளையாடி வருகின்றனர். வருன் சக்ரவர்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் அவருக்கு இந்திய அணியிலும் வாய்ப்பு கிடைத்தது. இந்திய t20 அணியில் இவர் இடம் பிடித்திருந்தார்.

ஆனால் திடீரென ஏற்பட்ட காயத்தின் காரணமாக ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் இருந்து விலகினார். இவர் விலகியது தங்கராசு நடராஜனுக்கு பெரும் வாய்ப்பை கொடுத்திருக்கிறது. அது ஒருபக்கம் இருந்தாலும் தற்போது வரும் சக்கரவர்த்திக்கு தனது நீண்டகால தோழியுடன் திருமணமாகிவிட்டது. கிரிக்கெட்டில் சாதித்த பின் இவர்கள் வாழ்க்கை தற்போது அடுத்த கட்டத்திற்கு எட்டியிருக்கிறது. தனது நீண்டகால தோழியுடன் சென்னையில் உறவினர்கள் மட்டும் கலந்து கொள்கின்ற ஒரு சிறிய நிகழ்ச்சி ஒன்றில் திருமணம் செய்து கொண்டார். வருண் சக்கரவர்த்தியின் இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

படித்து முடித்தபின் சரியான வேலை கிடைக்காமல் கிடைக்கும் வேலை செய்துவந்த நிலையில் தான் கிரிக்கெட் விளையாட்டுக்கு முழுமையாகத் திரும்பினார். அதன்பின் டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் வருண் சக்ரவர்த்தி மதுரை பேந்தர்ஸ் அணியில் விளையாடத் தேர்வு செய்யப்பட்ட போதுதான் அவரின் திறமை அனைவராலும் அறியப்பட்டது.
குறிப்பாக வருண் சக்ரவர்த்தியின் சுழற்பந்துவீச்சைப் பார்த்து தினேஷ் கார்த்திக், அஸ்வின் ஆகியோர் வியந்தார்கள். அதன்பின் வருண் சக்ரவர்த்தி கிரிக்கெட்டின் படிகளில் உயரே செல்வதற்கு அடுத்தடுத்து பலர் உதவினார்கள். ஐபிஎல் அணியில் இடம் பெற்று, தற்போது இந்திய அணியிலும் இடம் பெற்றுள்ளார்.

