இவரை எதனடிப்படையில் இன்னும் பிளேயிங் லெவனில் வைத்திருக்கிறீர்கள். எப்போதோ உள்ளூர் போட்டிகளில் விளையாட அனுப்பியிருக்க வேண்டும் என்று தொடர்ந்து கேஎல் ராகுலை விமர்சித்து வந்த வெங்கடேஷ் பிரசாத், முதல் ஒருநாள் போட்டிக்கு பிறகு அவரை பாராட்டி ட்வீட் செய்திருக்கிறார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்து 188 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதன் பிறகு பேட்டிங் செய்த இந்திய அணி 39 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. பின்னர் களமிறங்கிய கேஎல் ராகுல், முதலில் ஹர்திக் பாண்டியா, பின்னர் ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.
முந்தைய போட்டிகளில் படுமோசமான பார்மில் இருந்த கேஎல் ராகுலை எதற்காக பிளேயிங் லெவனில் எடுக்கிறீர்கள் என்று கேள்விகள் எழுந்தது. அவை அனைத்திற்கும் பதிலளிக்கும் விதமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முக்கியமான கட்டத்தில் பொறுப்போடு விளையாடி 75 ரன்கள் அடித்தார்.
கேஎல் ராகுலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இதற்கிடையில் கேஎல் ராகுலை சிறப்பாக பாராட்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் வெங்கடேஷ் பிரசாத். அவர் பதிவிட்டதாவது:
“மிகச்சிறந்த பொறுப்பான ஆட்டத்தை அழுத்தமான சூழலில் வெளிப்படுத்தி, அபாரமாக ஆடியுள்ளார் கேஎல் ராகுல். உச்சகட்ட ஆட்டம். ஜடேஜா சிறப்பான சப்போர்ட் கொடுத்தார். இந்தியவுக்கு தரமான வெற்றி.” என்று கேஎல் ராகுல் பாராட்டி பதிவிட்டார்.
Excellent composure under pressure and a brilliant innings by KL Rahul.
Top knock. Great support by Ravindra Jadeja and a good win for India.#INDvAUS pic.twitter.com/tCs74rBiLP— Venkatesh Prasad (@venkateshprasad) March 17, 2023
இதற்கு முன்னர், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதக் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் கில்லுக்கு பதிலாக இவரை பிளேயிங் லெவனில் எடுத்து, விளையாட வைத்ததற்கு கடுமையாக விமர்சித்தார் வெங்கடேச பிரசாத். மேலும், இவரது விமர்சனத்திற்கு ஏற்றவாறு கேஎல் ராகுலும் 3 இன்னிங்ஸ்களில் 38 ரன்கள் மட்டுமே அடித்தார்.
There is a view that KL Rahul has an outstanding overseas Test record. But stats speak otherwise. He has a test avg of 30 overseas in 56 innings. He has scored 6 overseas centuries but followed it up with a string of low scores that’s why averaging 30. Let’s look at a few others pic.twitter.com/MAvHM01TcY
— Venkatesh Prasad (@venkateshprasad) February 20, 2023
ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் நன்றாக விளையாடி, விமர்சனத்தை பாராட்டாக மாற்றியுள்ளார் கேஎல் ராகுல்.