அனைவரும் எதிர்பார்த்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நேற்று துவங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். நேற்று இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 64.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து146 ரன்கள் எடுத்திருந்தது.
அணியின் ஓபனிங் வீரர்கள் ரோகித் சர்மா 34 ரன்களும் சுப்மன் கில் 28 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். நம்பிக்கை வீரர் புஜாரா 8 ரன்களுக்கு ஆட்டமிழந்த அதிர்ச்சி அளித்தார்.
விராட் கோலி (44) மற்றும் அஜிங்கிய ரஹானே (29) சிறப்பாக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே நியூசிலாந்து கேப்டன் மிக பெரிய தவறு ஒன்றை செய்திருக்கிறார் என்று நேற்று விளக்கம் அளித்தார்.

ஸ்பின் பவுலர் இல்லாமல் இறங்கியது நியூசிலாந்து அணி செய்த தவறு
நேற்று 40 ஓவர் முடிவில் மைதானம் சற்றே வறண்டு போய் இருப்பதை என்னால் காண முடிந்தது. நிச்சயமாகச் ஸ்பின் பந்து வீச்சாளர்களுக்கு இந்த மைதானம் கை கொடுக்கும் என்று நம்புகிறேன் என்று கூறினார். அதன் அடிப்படையில் இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகிய தலைசிறந்த இரண்டு ஸ்பின் பந்து வீச்சாளர்கள் இருக்கின்றனர்.
ஆனால் நியூசிலாந்து அணியில் ஒரு ஸ்பின் பந்து வீச்சாளர் கூட இல்லை. நியூசிலாந்து அணி கேப்டன் 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியிருக்கிறார். நிச்சயமாக அவர் அஜாஸ் பட்டேலை நேற்றைய போட்டியில் விளையாட வைத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
250 முதல் 300 ரன்கள் எடுத்தாலே இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாகிவிடும்

மேலும் பேசிய அவர் இந்திய அணி இதே போல் சிறப்பாக விளையாடி 250 அல்லது 300 ரன்களுக்கு மேல் குவித்தால் நிச்சயமாக அது மிகப்பெரிய ஸ்கோர் ஆக அமைந்து விடும். எதிர்முனையில் நியூசிலாந்து அணி வீரர்களை ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா, மிக எளிதாக கைப்பற்ற அதிக வாய்ப்பு உள்ளது என்று கூறியிருக்கிறார்.
மைதானம் இதே போல் வறண்டு காணப்பட்டால் நிச்சயமாக இந்திய அணி எடுத்த முடிவு சரியான முடிவாக அமைந்துவிடும் என்றும் இதிலிருந்து நியூசிலாந்து அணி தப்பிக்க வேண்டுமானால் மீண்டும் மழை குறுக்கிட வேண்டும் என்று கூறியிருக்கிறார்.