வீடியோ: மிரட்டலாக ஆடிவந்த மார்ஷ்... உன் பாட்சா என்கிட்ட பலிக்காதுன்னு ஸ்டம்ப்பை தெறிக்கவிட்ட பலே பாண்டியா! 1

அதிரடியாக ஆடிவந்த மிச்சல் மார்ஷ் விக்கெட்டை போல்ட் செய்து எடுத்துள்ளார் ஹர்திக் பாண்டியா. இதன் வீடியோவை கீழே பார்ப்போம்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று 1-1 என தொடர் சமனில் இருக்கிறது.

வெற்றி தோல்வியை முடிவு செய்யும் மூன்றாவது போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.

வீடியோ: மிரட்டலாக ஆடிவந்த மார்ஷ்... உன் பாட்சா என்கிட்ட பலிக்காதுன்னு ஸ்டம்ப்பை தெறிக்கவிட்ட பலே பாண்டியா! 2

ஆஸ்திரேலியா அணிக்கு டேவிட் வார்னர் மீண்டும் அணிக்கு உள்ளே வந்திருந்தாலும், அதிரடி துவக்க வீரர்கள் டிராவிஸ் ஹெட் மற்றும் மிட்ச்சல் மார்ஷ் இருவரும் ஓபனிங் செய்தனர். கடந்த போட்டி போலவே இதிலும் தங்களது அதிரடியை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தி கொண்டே இருந்தனர்.

ஹெட்-மார்ஷ் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்தது. ஹர்திக் பாண்டியா பந்துவீசிய தனது முதல் ஓவரிலேயே டிராவிஸ் ஹெட் விக்கெட்டை வீழ்த்தினார். ஹெட் 33 ரன்களுக்கு வெளியேறினார். அடுத்ததாக உள்ளே வந்த ஸ்டீவ் ஸ்மித் 3 பந்துகள் பிடித்து ரன் எதுவும் எடுக்காமல் ஹர்திக் பாண்டியா-விடம் ஆட்டம் இழந்தார்.

வீடியோ: மிரட்டலாக ஆடிவந்த மார்ஷ்... உன் பாட்சா என்கிட்ட பலிக்காதுன்னு ஸ்டம்ப்பை தெறிக்கவிட்ட பலே பாண்டியா! 3

ஆரம்பத்தில் இருந்து பவுண்டரி மற்றும் சிக்ஸர்களாக அடித்து வந்த துவக்க வீரர் மிட்ச்சல் மார்ஷ், ஹர்திக் பாண்டியா வீசியபோதும், முதல் பந்தில் பவுண்டரி அடுத்தார். அதற்கு அடுத்த பந்தில் போல்ட் செய்து மிட்ச்சல் மார்ஷ் விக்கெட்டை எடுத்தார் ஹர்திக் பாண்டியா.

விக்கெட் எடுக்க முடியாமல் திணறி வந்த இந்திய அணிக்கு மூன்று ஓவர்களில் மூன்று விக்கெடுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார் ஹர்திக் பாண்டியா. இதனால் இந்திய அணி மீண்டும் ஆட்டத்திற்குள் திரும்பியது. 68 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி இருந்த ஆஸ்திரேலியா அணி ஹர்திக் பாண்டியாவின் அபாரமான பந்துவீச்சால் 85 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

வீடியோ: மிரட்டலாக ஆடிவந்த மார்ஷ்... உன் பாட்சா என்கிட்ட பலிக்காதுன்னு ஸ்டம்ப்பை தெறிக்கவிட்ட பலே பாண்டியா! 4

தற்போது களத்தில் லபுஷேன் மற்றும் வார்னர் இருவரும் களத்தில் விளையாடி வருகின்றனர்.

ஹர்திக் பாண்டியாவின் பந்தில் மிட்ச்சல் மார்ஷ் ஆட்டமிழந்த வீடியோ:

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *