வீடியோ: சேப்பாக்கம் எங்க கோட்டை தம்பி... மாயாஜால சுழலில் சூர்யகுமார் ஸ்டம்ப்பை சிதறவிட்ட ஜட்டு...பேசாமல் நடையைகட்டிய சூர்யகுமார்! 1

நன்றாக விளையாடி வந்த சூர்யகுமார் யாதவின் ஸ்டம்ப்பை மாயாஜால சூழலில் சிதறவிட்டிருக்கிறார் ரவீந்திர ஜடேஜா. சிறப்பான இந்த சம்பவத்தின் வீடியோவை கீழே காணலாம்.

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிவரும் லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. சிஎஸ்கே அணி பவுலிங் செய்வதாக முடிவெடுத்தது.

வீடியோ: சேப்பாக்கம் எங்க கோட்டை தம்பி... மாயாஜால சுழலில் சூர்யகுமார் ஸ்டம்ப்பை சிதறவிட்ட ஜட்டு...பேசாமல் நடையைகட்டிய சூர்யகுமார்! 2

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இம்முறை ரோகித் சர்மா ஓபனிங் இறங்கவில்லை. இஷான் கிஷன் உடன் கேமரூன் கிரீன் ஓபனிங் இறங்கினார்.

துஷார் தேஷ்பாண்டே வீசிய ஓவரில் கேமரூன் கிரீன் தூக்கி அடிக்கப்பார்த்து பந்தை மிஸ் செய்ததால், க்ளீனாக போல்டாகி வெளியேறினார். கிரீன் 6 ரன்களில் அவுட்டானார். தீபக் சகர் வீசிய அடுத்த ஓவரில் இஷான் கிஷன் தூக்கி அடிக்கப்பார்த்து சிஎஸ்கே வீரர் தீக்ஷனாவிடம் பிடிபட்டு 9 பந்துகளில் 7 ரன்களுக்கு அவுட்டானார்.வீடியோ: சேப்பாக்கம் எங்க கோட்டை தம்பி... மாயாஜால சுழலில் சூர்யகுமார் ஸ்டம்ப்பை சிதறவிட்ட ஜட்டு...பேசாமல் நடையைகட்டிய சூர்யகுமார்! 3

 

அதே தீபக் சஹர் ஓவரில் உள்ளே வந்த ரோகித் சர்மா, பின்பக்கம் தூக்கி அடிக்கப்பார்த்து ஜடேஜாவிடம் பிடிபட்டு ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். 14 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை கொடுத்து மிகவும் தடுமாறியது மும்பை இந்தியன்ஸ் அணி.

அப்போது ஜோடி சேர்ந்த நேஹால் வதேரா மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் அணியை சரிவிலிருந்து மீட்டனர். இந்த ஜோடி நான்காவது விக்கெட்டிற்கு 55 ரன்கள் சேர்த்தது. சூர்யகுமார் யாதவ் திருப்புமுனை வீரராக இருப்பார் என்று எதிர்பார்த்திருந்த நேரத்தில் ஜடேஜா உள்ளே வந்து தனது மாயாஜால சூழலில் நேர்த்தியாக போல்டு செய்தார். 22 பந்துகளில் 26 ரன்கள் அடித்து சூர்யகுமார் யாதவ் வெளியேறினார். இதன் விடியோவை கீழே பார்க்கலாம்.

வீடியோ: சேப்பாக்கம் எங்க கோட்டை தம்பி... மாயாஜால சுழலில் சூர்யகுமார் ஸ்டம்ப்பை சிதறவிட்ட ஜட்டு...பேசாமல் நடையைகட்டிய சூர்யகுமார்! 4

சூர்யகுமார் யாதவை ஜடேஜா போல்டு செய்த வீடியோ:

அதன் பிறகு டிரிஸ்டன் ஸ்டப்ஸ் உடன் ஜோடி சேர்ந்த நேஹால் வதேரா வரிசையாக பவுண்டரிகள் வரிசையாக அடித்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஸ்கோரை உயர்த்தினார். ஐபிஎல் வரலாற்றில் முதல் அரைசதத்தை பதிவு செய்த நேஹால் வதேரா 51 பந்துகளில் 8 பவுண்டரிகள் ஒரு சிக்சர் உட்பட 64 ரன்கள் அடித்து அவுட் ஆனார்.

வீடியோ: சேப்பாக்கம் எங்க கோட்டை தம்பி... மாயாஜால சுழலில் சூர்யகுமார் ஸ்டம்ப்பை சிதறவிட்ட ஜட்டு...பேசாமல் நடையைகட்டிய சூர்யகுமார்! 5

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *