ஒரு சில சமயங்களில் இந்திய அணிக்கு கேப்டன் கோலியா அல்லது தோனியா நமேக்கே சந்தேகம் வரும் வகையில் அணியை கைப்பற்றி வழி நடத்துவார் தோனி. தோனி அனியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக கேப்டனாக விலகியதில் இருந்து தற்போது வரை கோலியின் இந்த இந்திய் அணியில் தோனிக்கு ஒரு பெரும் பங்கு உள்ளது என்படு ஒரு மறுக்க முடியாத உண்மை.
இதனை கோலியே பல பேட்டிகளில் கூடியிருக்கிறார்,
தோனியை விட ஒரு கிரிக்கெடிங் ப்ரெய்ன எனக்கு இல்லை என்பது தான் உண்மை. திட்டமிட்டு சரியாக எக்சிக்யூட் செய்வதில் தோனி ஒரு கைதேர்ந்த வல்லவர். அடுத்து போட்டியில் என்ன நடக்கப் போகிறது என்பது அவருக்கு சரியாகத் தெரியும்.
என கோலி கூறியிருக்கிறார்.
மேலும், சில நேரங்களில் என் உள்ளுனர்வு என்ன சொல்கிறதோ அதயே தான் நான் செய்வேன். ஆனால், 10க்கு 8 அல்லது 9 முறை தோனி கூறுவதை அப்படியே செய்துவிடுவேன். சரியாக நடக்கும் முடிவுகளை மட்டுமே அவர் எப்போதும் கொடுப்பார். என் அணியில் அவரை வைத்திருப்பது எனக்கு எப்போதும் மகிழ்ச்சி தான்.
எனவும் கூறியிருக்கிறார் கோலி.
அதே போல் பலமுறை கோலி கேப்டனாக இருக்கும் போது இக்காட்டான சூழ்னிலைகளில் தோனி அணியை கைப்பற்றி அற்புதமாக செயல்படவைத்துள்ளார். அதே போல் தான் தற்போது நவ்.7ஆம் தேதி நடைபெற்ற இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 போட்டியின் போது கடைசி ஓவர் வரி ஆட்டம் பரபரப்பாக சென்றது அதனால் கடைசி கட்டத்தில் தோனி அணியை தன் கட்டுப்பாட்டில் எடுத்து அணிக்கு வெற்றி தேடித்தந்தார். கடைசி நேரத்தில் சரியான ஃபீல்டிங்க் அமைத்து அற்புதமாக செயல்பட்டதை பார்த்து கோலியும் மகிழ்ச்சியடைந்தார்.
அந்த வீடியோ காட்சி கீழே :