தற்போது லண்டனில் மகளிர் கிரிக்கெட் உலக கோப்பை போட்டிகள் நடந்து கொண்டு இருக்கிறது. இதில் ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதியது அப்பொழுது ஒரு ரன் அவுட்டை நடுவர் அவுட் இல்லை என்று கூறிவிட்டார் அந்த நடுவர் மூன்றாவது நடுவரிடம் எதுவும் கேக்கமால் அவுட் இல்லை என்று கூறிவிட்டார்.ஏன் ஏன் என்றால் இந்த போட்டியின் போது மூன்றாவது நடுவர் இல்லையாம்.இந்த பொடிகள் திங்கள்கிழமை நடந்தது.
இது போன்ற முக்கிய போட்டிகளில் எவ்வாறு மூன்றாவது நடுவர் இல்லாமல் போனார் என்று அனைவரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
கிரிக்கெட் போட்டிகளில் மூன்றாவது நடுவரின் பங்கு மிகவும் முக்கியமானது ஆனால் இந்த பொடியில் மூன்றாவது நடுவரே இல்லை என்று கூறுவது மிகவும் வேடிக்கையை உள்ளது.நடுவரின் பங்கு எவ்வளவு முக்கியமோ அது போலவே மூன்றாவது நடுவரின் பங்கும் மிகவும் முக்கியம்.
அதுவும் இது போன்று ரன் அவுட் விஷயத்தில் மூன்றாவது நடுவரின் பங்கு மிக மிக முக்கியமான ஒன்று.இது அனைவர்க்கும் தெரிகிறது ஆனால் அந்த கிரிக்கெட் சங்கத்திற்கு தெரியவில்லை.
வீடியோவை பாருங்கள் நீங்களே வியந்து போவீர்கள் :
ட்விட்டரில் பரவியது :
முடிவில், ஆஸ்திரேலியா வெஸ்ட் இண்டீஸ்ஸை தோற்கடித்த போதிலும்; இன்னும் பல கேள்விகளை விட்டு விடுகிறது.
இத்தனை கேள்விகள் :
இன்றைய உலகில் மூன்றாவது நடுவர் வசதி ஜூனியர் கிரிக்கெட்டில் கிடைக்கிறது,அந்த போட்டிகள் ஒளிபரப்பப்படவில்லை என்றாலும் கூட மூன்றாவது நடுவர் இருக்கிறார் ஆனால் இந்த போட்டியில் இல்லாதது ஏன் என்று தான் யாருக்கும் தெரியவில்லை.
ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாட்டின் அதிர்ஷ்டத்தை மாற்றக்கூடிய ஒரு முக்கியமான தொழில்நுட்பத்தை இழக்க வேண்டும்.ஒரு பக்கத்தில், ஐ.சி.சி டி.ஆர்.எஸ் அமைப்பை மகளிர் உலகக் கோப்பையில் அறிமுகப்படுத்தியது, மற்றொரு பக்கம், பல கேள்விகளை எழுப்பும் ஆட்டத்தில் கூட அடிப்படை அவசியங்கள் இல்லை.
உண்மையில், பெண்கள் உலகக் கோப்பை போட்டிகளின் அல்லாத ஒளிபரப்பு – இந்திய அணி போட்டிகளை தவிர – தன்னை மிக பெரிய கேள்வி கேட்க படுகிறது.
அன்று நடந்த போட்டியின் விவரம் :
ஆனால் இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வீரர்களின் விவரம் :
இங்கிலாந்தின் டான்டனில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 47.5 ஓவர்களில் 204 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மேத்யூஸ் 46, கேப்டன் டெய்லர் 45, சி.என்.நேஷன் 39 ரன்கள் எடுத்தனர்.
ஆஸ்திரேலியத் தரப்பில் பெர்ரி 3 விக்கெட்டுகளையும், ஜொனாசென், பீம்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
போல்டான் சதம்: பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணியில் மூனே-போல்டான் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 30.1 ஓவர்களில் 171 ரன்கள் குவித்தது. மூனே 85 பந்துகளில் 1 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து வந்த கேப்டன் லேனிங் 12 ரன்களில் ஆட்டமிழந்தபோதும், போல்டான் சதமடித்தார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 38.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்து வெற்றி கண்டது. போல்டான் 116 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 107, பெர்ரி 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் டெய்லர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இது போன்று எந்த போட்டியிலும் நடந்தது இல்லை ஆனால் முதல் முதலில் இது போன்று வேடிக்கை ஆன நிகழ்ச்சிகள் இங்கே தான் நடந்து உள்ளது.
இது போன்று இனிவரும் போட்டிகளில் நடக்காதப்படி கிரிக்கெட் சங்கங்கள் சிறந்த முடிவை எடுக்க வேண்டும்.
பிறகு நடந்த ஆட்டத்தின் முடிவு :
இதை அடுத்து நடை பெற்ற போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் களம் இறங்கி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 377 ரன்கள் சேர்த்து பிறகு களம் இறங்கிய பாகிஸ்தான் அணி 29.2 ஓவர்கள் முடிவில் 107 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டை இழந்தது.
இதையடுத்து 378 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடத் தொடங்கிய பாகிஸ்தான் 29.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்திருந்தபோது மழையால் ஆட்டம் தாமதமானது.
ஆயிஷா ஸஃபர் 56, நைன் அபிதி 23 ரன்களுடன் விளையாடிக் கொண்டிருந்தனர். முன்னதாக, நஹிதா கான் 3, ஜாவெரியா கான் 11, அஸ்மாவியா இக்பால் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
அப்பொழுது மழை வந்து ஆட்டம் பாதியில் கைவிட பட்டது.