தற்போது இலங்கை அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. முதலில் இந்த சுற்றுப்பயணம் டெஸ்ட் தொடருடன் தொடங்கவுள்ளது. இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நவம்பர் 16 ஆம் தேதி தொடங்குகிறது.
இந்த இரண்டு அணிகளும் இது வரை இந்த மைதானத்தில் விளையாடியது இல்லை, அதே போல் இலங்கை அணி ஒரு முறை கூட இந்தியாவில் தொடரை வென்றதில்லை. இதற்கு முன்பு தன் சொந்த மண்ணிலேயே 3-0 என்ற கணக்கில் இந்திய அணியிடம் டெஸ்ட் தொடரை இழந்தது இலங்கை அணி.
கொல்கத்தாவில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால், இந்த போட்டிக்கான டாஸ் போட தாமத படுத்தினார்கள். கடைசியாக மழை நின்ற பிறகு, மதியம் 1 மணிக்கு டாஸ் போட்டார்கள். மழை பெய்ததால் இந்த மைதானம் ஈரமாக இருக்கும். இதனால், அது பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும். இதனை அறிந்து கொண்ட இலங்கை அணி, டாஸ் வென்றதும் பந்துவீச்சை தேர்வு செய்து விட்டார்கள்.
இதனால், பல மணி நேரம் கழித்து கிரிக்கெட் ரசிகர்கள் சந்தோஷம் அடைந்தார்கள். முதல் பந்தை வீசுவதற்கு முன்பு இரு அணிகளும் தேசிய கீதத்தை பாட நின்று கொண்டிருந்தார்கள். இலங்கையின் தேசிய கீதம் முடிந்ததும், இந்தியாவின் தேசிய கீதம் பாடும் போது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, வாயில் சுவிங்கத்தை மென்னு முணுமுணுத்து கொண்டு இருந்தார்.
இதே மாதிரி சம்பவம் ஒரு முறை நடந்துள்ளது. ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் பர்வேஸ் ரசூல், இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகம் ஆன போது, அவர் தனது வாயில் சுவிங்கம் வைத்திருந்தார்.
அந்த வீடியோவை பாருங்கள்:
இந்தியா – இலங்கை முதல் டெஸ்ட்:
இந்தியா – இலங்கை முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால், இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லாமல் வீசிய முதல் ஓவர் முதல் பந்தை எதிர்கொண்ட இந்திய அணியின் நட்சத்திர வீரர் லோகேஷ் ராகுல், முதல் பந்திலேயே பெவிலியன் திரும்பினார். அதன் பிறகு வந்த புஜாரா பொறுமையாக விளையாடி கொண்டிருந்தாலும், இன்னொரு தொடக்க வீரரையும் இழந்தது இந்திய அணி. ஏழாவது ஓவரில் லக்மல் ஓவரில் கிளீன் போல்ட் ஆனார் தவான்.