சின்ன பையனிடம் சீன் போட்ட ஸ்டூவர்ட் பிராட்; வச்சு செய்யும் இந்திய ரசிகர்கள்
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ரிஷப் பண்டின் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் கெட்ட வார்த்தையில் பேசிய ஸ்டூவர்ட் பிராட்டை இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்தியா இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் இளம் வீரர் ரிஷப் பண்ட், இந்திய அணியில் களமிறக்கப்பட்டார். இதுதான் அவருக்கு முதல் டெஸ்ட் போட்டி. அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
பேட்டிங், விக்கெட் கீப்பிங் என இரண்டிலுமே சிறப்பாக செயல்பட்டார். முதல் போட்டியிலேயே சிக்ஸருன் ரன் கணக்கை தொடங்கி, எதிரணியை மிரளவிட்டார். 24 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தாலும், அவர் அவுட்டான பந்தை தவிர மற்ற பந்துகளை திறமையாக ஆடினார். தவறான பேட்டிங் அணுகுமுறையால் ஸ்டூவர்ட் பிராட், ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே வீசிய பந்தில் அவுட்டானார். காலை நகர்த்தாமல், பேட்டை மட்டும் விட்டு அடிக்க முயன்றதால், பேட்டின் உள்பக்கத்தில் எட்ஜாகி போல்டானார் ரிஷப் பண்ட்.
https://vimeo.com/285695573
ரிஷப் பண்ட்டை அவுட்டாக்கியதும், அவரை நோக்கி ஏதோ பேசிக்கொண்டே சென்றார் ஸ்டூவர்ட் பிராட். ரிஷப் பண்ட் அவுட்டான அதிருப்தியில் சென்றார். ரிஷப் பண்ட் பொதுவாகவே ஆக்ரோஷமான வீரர். அறிமுக டெஸ்ட் போட்டியில் சிக்ஸர் அடித்து ரன் கணக்கை தொடங்கியபோதே இங்கிலாந்து அணி அதை அறிந்திருக்கும். அறிமுக போட்டியில் களமிறங்கிய வீரரை, அதுவும் ஆக்ரோஷமான மற்றும் திறமையான வீரரை பிராட், இப்படி வழியனுப்பியிருக்க கூடாது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரிஷப் பண்ட் இனிவரும் இன்னிங்ஸ்களில் ஆட வாய்ப்புள்ளது.
இதனையடுத்து கடந்த 2007ம் ஆண்டு இதே போல் இந்திய அணியின் மற்றொரு ஆக்ரோஷ ஆட்டக்காரர் யுவராஜ் சிங்கிடன் வாயை கொடுத்ததன் வினையாக ஒரு ஓவரின் 6 பந்துகளிலும் 6 சிக்ஸரை வாரி வழங்கிய பட்ட அசிங்கத்தை மறந்துவிட வேண்டாம் என்று ஸ்டூவர்ட் பிராட்டை இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக கிண்டலடித்து வருகின்றனர்..
I'm English and I'm embarrassed by that send off Stuart Broad gave a young Pant on debut. Maybe frustration after bowling well yesterday and not getting wickets. Hope he looks back and regretts it. Game needs a bit of spice but not like that. #ENGvIND #Broad #Pant
— Cricket tweets (@_stavros1) August 19, 2018
https://twitter.com/imsgshinde/status/1031135398313914368
Stuart broad is so lucky to have the surname that he has. He will probably get away because the men who have to report him first have to work with his dad as well. Let’s see if any of the on field umpires have the guts to report him for his Pant send-off #cricket #EngvInd
— Chandresh Narayanan (@chand2579) August 19, 2018
Stuart Broad is talking a bit too much. @RishabPant777 maybe the 2nd innings you can remind him about the @YUVSTRONG12 6 sixes. #ENGvIND
— Saiyami Kher (@SaiyamiKher) August 19, 2018
Stuart Broad mouthing off Rishabh Pant on the latter's debut Test. Cute. Waiting for another Yuvraj Singh to emerge. #ENGvIND
— Aishu Haridas (@imaishu_) August 19, 2018