ஆர்சிபி டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் டு பிளசிஸ், மேக்ஸ்வெல் மற்றும் ஹர்ஷல் பட்டேல் ஆகியோரை க்ளீன் போல்டு செய்து கதிகலங்க விட்டார் வருண் சக்ரவர்த்தி. 3 பேரின் க்ளீன் போல்டு வீடியோ கீழே உள்ளது.
கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆர்சிபி அணி பவுலிங் தேர்வு செய்தது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு குர்பாஸ் மற்றும் வெங்கடேஷ் ஐயர் இருவரும் ஓபனிங் செய்தனர். வெங்கடேஷ் ஐயர்(1) மற்றும் மந்தீப் சிங்(0) இருவரும் டேவிட் வில்லே பந்தில் போல்டு ஆகினார். நித்திஷ் ரானா(1) சோதப்பலாக அவுட்டானார்.

குர்பாஸ் (57), ரஸ்ஸல்(0) இருவரும் அடுத்தடுத்த பந்தில் வெளியேறினார். இதனால் 89/5 என்கிற இக்கட்டான நிலையில் கொல்கத்தா அணி இருந்தது. அந்த நேரத்தில் உள்ளே வந்த சர்துல் தாக்கூர் பவுண்டரி சிக்ஸர்களாக விளாசி வெறும் 20 பந்துகளில் அரைசதம் ஆட்டத்தை மொத்தமாக கொல்கத்தா பக்கம் திருப்பினார். இவர் 29 பந்துகளில் 68 ரன்கள் அடித்தது மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

இறுதியில் ரிங்கு சிங் 46 ரன்கள் அடிக்க, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 204 ரன்கள் குவித்தது கொல்கத்தா.
மிகப்பெரிய இலக்கை சேஸ் செய்த ஆர்சிபி அணிக்கு டு பிளசிஸ் மற்றும் விராட் கோலி நன்றாக துவங்கி முதல் விக்கெட்டுக்கு 44 ரன்கள் அடித்திருத்தபோது, விராட் கோலியின்(21) விக்கெட்டை தூக்கினார் சுனில் நரேன். இங்கு தான் ஆர்சிபி சரிவு துவங்கியது.

அடுத்த ஓவரில் டு பிளசிஸ்(23) விக்கெட்டை எடுத்தார் வருண் சக்ரவர்த்தி. தனது 2ஆவது ஓவரில் மேக்ஸ்வெல்(5), ஹர்ஷல் பட்டேல்(0) இருவரின் விக்கெட்டை ஒரே ஓவரில் தூக்கி அசத்தினார் வருண்.

பின்னர் வரிசையாக விக்கெட்டுகள் சரிந்து ஆர்பி அணி மொத்தமாக கவிழ்ந்தது. 96 ரன்களுக்கு 9 விக்கெட்டுகள் பறிபோயின. கடைசி விக்கெட்டுக்கு வில்லே மற்றும் ஆகாஷ் தீப் இருவரும் ஆறுதல் பார்ட்னர்ஷிப்(27 ரன்கள்) அமைந்ததால் அணியின் ஸ்கொர் 123 வரை சென்றது.
வருண் சக்ரவர்த்தி எடுத்த 3 போல்டுகளின் வீடியோவை இங்கே பார்ப்போம்.

வீடியோ:
Action movie name: 𝐓𝐇𝐄 #KKRvRCB 𝐓𝐇𝐑𝐈𝐋𝐋𝐄𝐑
Hero: @chakaravarthy29
Box office status: 𝐒𝐮𝐩𝐞𝐫𝐡𝐢𝐭 𝐛𝐥𝐨𝐜𝐤𝐛𝐮𝐬𝐭𝐞𝐫#IPLonJioCinema #TATAIPL pic.twitter.com/RFYMuf3B9f
— JioCinema (@JioCinema) April 6, 2023