கடைசி சர்வதேச போட்டியில் களமிறங்க இருக்கும் ஆஷிஷ் நெஹ்ராவுக்கு இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் வாழ்த்து கூறிய வீடியோ இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹராவுக்கு இது கடைசி சர்வதேச போட்டியாகும்.
18 ஆண்டுகள் சர்வதேச போட்டிகளில் நீடித்த 38 வயதான நெஹரா சொந்த ஊர் ரசிகர்களின் முன்னிலையில் விடைபெறுகிறார். அவரை வெற்றியுடன் வழியனுப்பும் முனைப்பில் இந்திய வீரர்கள் உள்ளனர்.
இந்நிலையில், அவருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் வாழ்த்து கூறும் வீடியோ இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
அதில் இந்திய வீரர்களான ரோஹித் ஷர்மா, தினேஷ் கார்த்திக், அஜிங்கியா ரகானே, ஷிகர் தவான் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோர் ஆஷிஷ் நெஹ்ராவுடன் நடந்த இனிப்பான விஷயங்கள் குறித்து கூறியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.