போட்டி முடிந்தபின், கைகுழுக்கும் நிகழ்வின்போது, விராட் கோலி – கம்பீர் வாக்குவாதம் நேர்ந்தது. அந்த நிகழ்வின் விடியோவை கீழே காணலாம்.
விராட் கோலியிடம் லக்னோ வீரர் கைல் மேயர்ஸ் பேசிக்கொண்டிருந்தபோது, அந்த பக்கம் வந்த கௌதம் கம்பீர் உடனடியாக கைல் மேயர்ஸை வம்படியாக ‘விராட் கோலியிடம் என்ன பேச்சு’ என்று அழைத்துச் சென்றார். இதனால் விராட் கோலி சற்று ஆத்திரமடைந்தார். இருப்பினும் அமைதியுடன் நடந்து சென்றுவிட்டார்.
விராட் கோலியை மற்றொரு லக்னோ விரர் நவீன் உல் ஹக் கைகுழுக்கும்போது, மேலும் வம்பிழுத்து ஆத்திரப்படுத்தினார். அப்போது கம்பீர் மீண்டும் ஒருமுறை இந்த விவாதத்திற்குள் வர முயற்சித்தபோது, நீராக விராட் கோலி கம்பீரிடம் செல்ல, இவர்களுக்கு இடையே வாதம் சூடு பிடித்தது.
உடனடியாக மற்ற வீரர்கள் ஓடி வந்து இருவரையும் தடுத்து தனித்தனியே அழைத்துச் சென்றனர். போட்டி முடிந்த பிறகு சிறிதுநேரம் சலசலப்பு நிலவியது. விருது வழங்கும் நிகழ்வின் போதும் விராட் கோலி சற்று கோபத்துடன் காணப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது
வீடியோ:
Kyle was talking to Virat, but then Gautam came and took Kyle away.#RCBVSLSG #ViratKohli
— Srinivas Reddy🇮🇳 (@reddycnuk) May 1, 2023
Fight broke out between Virat and Gambhir#RCBVSLSG #LSGvsRCB #LSGvRCB pic.twitter.com/O1tMnmIzMc
— Vivek (@basskaryaarr) May 1, 2023
போட்டி சுருக்கம்:
ஆர்சிபி மற்றும் லக்னோ அணிகள் மோதிய லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணிக்கு விராட் கோலி 31 ரன்கள், டு பிளசிஸ் 44 ரன்கள் அடித்து கொடுக்க 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழப்பிற்கு 126 ரன்கள் அடித்தது.
இந்த ஸ்கோர் போதாது என்றாலும் ஆர்சிபி அணியின பவுலர்கள் அபாரமாக செயல்பட்டதால் வரிசையாக விக்கெட்டுகளை எடுத்து லக்னோ அணியை தடுமாற்றத்தில் போட்டனர். இதனால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 19.5 ஓவர்களில் 108 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதன் மூலம் ஆர்சிபி அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 10 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது ஆர்சிபி அணி. தற்போது முதல் இடத்தில் குஜராத் அணி 12 புள்ளிகளுடன் இருக்கிறது. அடுத்த 5 அணிகள் தலா 10 புள்ளிகளுடன் இருக்கின்றன. ரன்ரேட் அடிப்படையில் முன்பின் மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது.