வெஸ்ட் இண்டீசில் நடந்த 2007 கிரிக்கெட் உலகக்கோப்பையில் முதல் சுற்றிலேயே இந்திய அணி வெளியே வந்ததால், தோனியை அனைவரும் திட்டி கொண்டிருந்தார்கள். ஆனால், அதே நேரத்தில் இன்னொரு உலகக்கோப்பை இந்தியாவிற்கு வாங்கி தந்தார் மகேந்திர சிங் தோனி. 2007 உலகக்கோப்பை முடிந்த இரண்டு வாரத்தில் இந்திய அணிக்கு முதல் டி20 உலகக்கோப்பையை வாங்கி கொடுத்தார் தோனி.

அதன் பிறகு, அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணியின் கேப்டன் பதவியில் உட்கார்ந்தார் மகேந்திர சிங் தோனி. இதன் பிறகு, இந்திய அணியை வேற லெவலுக்கு கூட்டிட்டு போனார் தோனி. இலங்கை மற்றும் நியூஸிலாந்தில் நடந்த இருதரப்பு ஒருநாள் தொடரில், இந்திய அணி முதல் முறையாக வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து, 2007-08 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் முதல் CB தொடரில் வெற்றி பெற்றது இந்தியா.
2009-இல் தோனியின் தலைமையில் இந்திய அணி ஒருநாள் அணிக்காக தரவரிசையில் முதல் இடத்தை பிடித்தது. பிறகு நியூஸிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடந்த டெஸ்ட் தொடரையும் இந்திய அணி வெற்றி பெற்றது. அது மட்டும் இல்லாமல், 2010 ஆசிய கோப்பை, 2011 உலகக்கோப்பை, 2013-இல் சாம்பியன்ஸ் டிராபி என அனைத்து விதமான கோப்பைகளை இந்திய அணிக்கு அவர் வாங்கி கொடுத்திருக்கிறார்.

ஆனால், இவை அனைத்தும் 2014-இல் அவர் டெஸ்ட் கேப்டன் பதவியை ராஜினாமா செய்த போது முடிந்து விட்டது. 2017-ஆண்டின் தொடக்கத்தில் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளின் கேப்டன் பதவியில் இருந்து தோனி ராஜினாமா பெற்றார், இதனால் அந்த பொறுப்பை விராட் கோலி ஏற்றுக்கொண்டார். தற்போது, இந்திய அணிக்காக ஒரு சாதாரண வீரராக தான் விளையாடுகிறார், அதை போலவே இன்னும் சில வருடங்களுக்கு விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
விராட் கோலியின் தலைமையில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. கோலியின் தலைமையில் இந்திய அணி பல வெற்றிகளை ருசித்து, சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டி வரை சென்றது. ஆனால், தோனியின் பங்களிப்புக்கு ஒப்பாகாது. முன்னாள் இந்திய கேப்டன் ‘தல’ தோனியை பற்றிய இந்த வீடியோவை பாருங்கள்: