தோனிக்கு பதிலாக கேப்டன் பதவியை ஏற்கிறார் இளம் வீரர் இஷான் கிஷான்
விஜய் ஹசரா தொடருக்கான ஜார்கண்ட் அணியின் கேப்டனாக இளம் வீரர் இஷான் கிஷான் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் ஆண்டுதோறும் உள்ளூர் தொடரான விஜய் ஹசரே தொடர் நடைபெறுவது வழக்கம். இதில் தங்களை நிரூபிக்கும் வீரர்களே ரஞ்சி கோப்பையில் இடம்பெறுவார், அதில் சோபிக்கும் வீரர்கள் இந்திய அணிக்கு தேர்வாகும் வாய்ப்பை பெறுவார்கள்.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த தொடர் மூலம் தங்களை அடையாளப்படுத்தி கொள்ள ஒவ்வொரு வீரர்களும் கடுமையாக போராட வேண்டும். இளம் வீரர்களுக்கு ஒரு வாய்ப்பை அமைத்து தரும் இந்த தொடரில் அடுத்த மாதம் துவங்குகிறது.
இந்த தொடருக்காக ஒவ்வொரு அணியும் தங்களது அணியை அறிவித்து வருகின்றன. இதில் ஜார்கண்ட் அணியின் கேப்டனாக இஷான் கிஷான் நியமிக்கப்பட்டுள்ளார்.

Photo by Deepak Malik – Sportzpics – IPL
கடந்த முறை ஜார்கண்ட் அணியை வழிநடத்திய இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தற்போது தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்க தென் ஆப்ரிக்கா சென்றுள்ளதால், அவருக்கு பதிலாக இஷான் கிஷான் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஜார்கண்ட் அணியின் மற்ற வீரர்களை விட இவர் சீனியர் வீரர் என்ற அடிப்படையில் ஜார்கண்ட் கிரிக்கெட் வாரியம் இவரை கேப்டனாக நியமித்துள்ளது.
விஜய் ஹசாரே தொடருக்கான ஜார்கண்ட் அணி;
இஷான் கிஷான், விராட் சிங், நஜிம் சித்திக், சுஸ்மிட் குமார், குமார் திபேப்திரா, சவுரவ் திவாரி, அதுல் சிங் சர்வார், உத்தரகாஷ் சிங், அதித்யா ராய், சபாஷ் நதீம், ராகுல் சுக்லா, மோனு சிங், வருன் ஆரோன், ஜசரான் சிங், விகாஸ் சிங்.