தோனியின் அறிவுறைன்படி பந்து வீசினேன் 8 விக்கெட் கிடைத்தது: நதீம் பெருமிதம் 1

விஜய் ஹசாரே கிரிக்கெட் போட்டியில் ஜார்கண்ட் வீரர் ஷாபாஸ் நதீம் 10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை கைப்பற்றி புதிய உலக சாதனை நிகழ்த்தி உள்ளார்.

விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்ளூர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை முருகப்பா மைதானத்தில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் ராஜஸ்தான்- ஜார்கண்ட் அணிகள் மோதின.

முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி, இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ஷபாஸ் நதீமின் பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 28.3 ஓவர்களில் 73 ரன்னில் சுருண்டது. சுழற்பந்து வீச்சாளர் ஷபாஸ் நதீம் 10 ஓவர்களில் 4 மெய்டனுடன் 10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை அள்ளினார்.தோனியின் அறிவுறைன்படி பந்து வீசினேன் 8 விக்கெட் கிடைத்தது: நதீம் பெருமிதம் 2

இதில் 5 பேட்ஸ்மேன்களை கிளீன் போல்டு ஆக்கியதும் அடங்கும். லிஸ்ட் ‘ஏ’ வகை போட்டியான ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில்
சர்வதேசம் மற்றும் உள்ளூர் போட்டி ஒரு வீரரின் சிறந்த பந்து வீச்சாக இது அமைந்துள்ளது. இதற்கு முன்பு 1997-98-ம் ஆண்டு இமாச்சலபிரதேச அணிக்கு எதிராக டெல்லி பவுலர் ராகுல் சாங்வி 15 ரன்னுக்கு 8 விக்கெட் வீழ்த்தியதே சிறந்த பந்து வீச்சாக இருந்தது.

சர்வதேச போட்டியில் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் சமிந்தா வாஸ் 2001-ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிராக 19 ரன்களுக்கு 8 விக்கெட் கைப்பற்றியது சாதனையாக இருக்கிறது. அவற்றை எல்லாம் 29 வயதான ஷபாஸ் நதீம் முந்தியுள்ளார். இந்த ஆட்டத்தில் ஜார்கண்ட் அணி 14.3 ஓவர்களில் இலக்கை அடைந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது.தோனியின் அறிவுறைன்படி பந்து வீசினேன் 8 விக்கெட் கிடைத்தது: நதீம் பெருமிதம் 3

விஜய் ஹசாரே போட்டியில், குறைந்த ரன்கள் விட்டுக்கொடுத்து அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் எனும் வரலாற்றுச் சாதனையை ஜார்கண்ட் சுழல் பந்துவீச்சாளர் படைத்துள்ளார்.

விஜய் ஹசாரே கோப்பைக்கான போட்டி இப்போது நடந்து வருகிறது. சென்னையில் நேற்று நடந்த போட்டியில். ராஜஸ்தான் அணியும் ஜார்கண்ட் அணிகளும் மோதின. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி 28.3 ஓவர்களில் 73 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதில்
ஜார்கண்ட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஷாபாஸ் நதீம் 10 ஓவர்கள் வீசி 10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்தார். தொடர்ந்து களமிறங்கிய ஜார்கண்ட் அணி 14.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 76 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.

 

ஏ வரிசை கிரிக்கெட் போட்டியில் நதீம் முந்தைய சாதனைகளை முறியடித்து உள்ளார். 1997- 98 ஆம் ஆண்டில் நடைபெற்ற போட்டியில் டெல்லி – இமாசலப்பிரதேசத்துக்கு இடையிலான போட்டியில் ராகுல் சங்வி 15 ரன்கள் கொடுத்து 8 விக்கெட்கைபற்றியதே சாதனையாக இருந்தது. அதை நதீம் முறியடித்துள்ளார். குறைந்த ரன்கள் விட்டுக்கொடுத்து அதிகவிக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் எனும் வரலாற்றுச் சாதனையை அவர் படைத்துள்ளார். அதோடு இந்தப் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்டையும் வீழ்த்தினார்.தோனியின் அறிவுறைன்படி பந்து வீசினேன் 8 விக்கெட் கிடைத்தது: நதீம் பெருமிதம் 4

இதுபற்றி நதீம் கூறும்போது, ’இந்த தினத்தை என்னால் மறக்க முடியாது. ஹாட்ரிக் சாதனை செய்ததும் மகிழ்ச்சியாக இருக்கிறது. வீழ்த்திய 8 விக்கெட்டுகளில் 5 விக்கெட்டுகள் கிளீன் போல்டாக்கியது இன்னும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சக வீரர்கள் சொன்ன பிறகுதான் நான் சாதனை செய்திருப்பதே தெரியும்’ என்றார்.

29 வயதாகும் நதீம் 99 முதல் தரப் போட்டிகளில் விளையாடி இதுவரை 375 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். ’ஏ’ வரிசை கிரிக்கெட் போட்டியில் 87 ஆட்டங்களில் பங்கேற்று 124 விக்கெட்டுகளையும், டி20 போட்டிகளில் 109 ஆட்டங்களில் 89 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *