இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு பிறகு கோலி தொண்டு நிறுவனத்தின் சார்பில் லண்டனில் நடந்த இரவு உணவு நிகழ்வு நடத்த பட்டது. இந்த நிகழ்ச்சியில் எதிர்ப்பாராத விஜய் மல்லயா கலந்து கொண்டு அதிர்ச்சி அளித்தார்.
எந்த சர்ச்சைகளும் ஏற்பட கூடாது என்பதற்காக அவரிடம் இருந்து ஒதுங்கியே இருந்தார்கள் இந்திய வீரர்கள். விஜய் மல்லயா வந்தது இந்திய அணிக்கு விருப்பம் இல்லை, இதனால் கூடிய சீக்கிரமே இந்திய அணி கிளம்பி விட்டது.
ரூபாய் 9000 கோடி கடன் இருப்பதால், இந்தியாவில் இருந்து லண்டன் வந்தார் மல்லயா. இதனால், இந்திய போலீஸின் கோரிக்கை படி லண்டன் போலீஸ் அவரை கைது செய்தது. ஆனால், சில மணி நேரங்களில் அவர் ஜாமினில் வெளி வந்து விட்டார்.
“கோலியோ அல்லது அவரது தொண்டு நிறுவனமோ மல்லய்யாவை அழைக்கவில்லை. ஆனால், தொண்டு நிறுவன இரவு உணவிற்கு அட்டவணை பதிவு செய்யப்பட்டவர்கள், விருந்தினரை அழைக்க அழைக்க உரிமை உள்ளது,” என பிசிசிஐ-இல் இருக்கும் ஒருவர் கூறினார்.
“அவர் வந்தது எந்த இந்திய வீரருக்கும் பிடிக்க வில்லை, இதனால் அந்த இடத்தை விட்டு நாங்கள் முன்னதாகவே கிளம்பி விட்டோம். அவரை வெளியே போக சொல்ல யாராலையும் முடியாது,” என மேலும் கூறினார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் உரிமையாளர் விஜய் மல்லயா, அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருந்த இந்தியா – பாகிஸ்தான் போட்டியை மைதானத்தில் இருந்து கண்டு மகிழ்ந்தார்.