சென்னையில் நடந்த கல்யாணம்! யாருக்கும் தெரியாமல் திடீரென திருமணம் செய்துகொண்ட தமிழக வீரர்! 1

இன்று சென்னையில் தனக்கு நிச்சயம் செய்யப்பட்டிருந்த வைசாலி என்கிற பெண்ணை பெரியளவில் யாருக்கும் தெரியப்படுத்தாமல் திருமணம் செய்திருக்கிறார் இந்திய வீரர் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த விஜய் சங்கர்.

இந்திய அணியின் பேட்டிங் ஆல்ரவுண்டர்களில் முன்னணி வீரராக பார்க்கப்பட்டவர் விஜய்சங்கர். டிஎன்பிஎல் மற்றும் ஐபிஎல் தொடர் மூலம் இந்திய அணியில் இடம்பெற்று செல்ல சிறிது காலம் விளையாடினார். அதன்பிறகு சரிவர விளையாடாமல் இருந்ததால் இந்திய அணியில் இருந்து இவருக்கு வாய்ப்புகள் குறைந்துவிட்டன. தற்பொழுது தமிழக அணிக்கு மட்டும் விளையாடி வரும் இவர் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடுகிறார்.

சென்னையில் நடந்த கல்யாணம்! யாருக்கும் தெரியாமல் திடீரென திருமணம் செய்துகொண்ட தமிழக வீரர்! 2

இவருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. கொரோனா காரணமாக யாருக்கும் பெரிதளவில் அழைப்புக்கள் விடுக்கவில்லை. இந்நிலையில் இன்று சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தனது திருமணத்தையும் எளிமையாக செய்து முடித்திருக்கிறார். வீரர்கள் பலர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வருவதால் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகள் காரணமாக அவர்களை திருமணத்திற்கு அழைக்க முடியவில்லை. நெருங்கிய உறவினர்களும் நலன்கருதி முடிந்தவரை வருவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தினார். இவற்றை வைத்து எளிமையான முறையில் திருமணத்தை செய்து முடிக்கிறோம்.” என அவரது உறவினர் பேட்டி கொடுத்திருக்கிறார்.

சென்னையில் நடந்த கல்யாணம்! யாருக்கும் தெரியாமல் திடீரென திருமணம் செய்துகொண்ட தமிழக வீரர்! 3

இவரது திருமணத்திற்கு நண்பர்கள் பலர் வேறு வழியில்லாமல் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். விஜய் சங்கர் இந்திய அணிக்காக கடந்த 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் பங்கேற்றார். இதுவரை 12 ஒருநாள் போட்டிகளிலும் 9 டி20 போட்டிகளிலும் விளையாடி இருப்பது குறிப்பிடத்தக்கது. திருமணம் முடிந்த பிறகு அந்த புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் இருக்கு இங்கிலாந்து வீரர்கள் இந்திய வந்து அடைந்து விட்டனர் மேலும் அவர்கள் சென்னையில் தங்க வைக்கப்பட்டு இருக்கின்றனர் அதேநேரம் இந்திய வீரர்களும் சென்னை வந்தடைந்தது தனிமைப்படுத்துதல் இருக்கின்றனர் இவை முடிந்தவுடன் விரைவில் பயிற்சிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *