JCC
ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீரராக மாறவேண்டுமா?
இங்கே ரெஜிஸ்டர் செய்யுங்கள்

*T&C Apply

“2019 உலகக்கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்குமுன் இரவு…” யாரும் அறிந்திராத தகவலை கூறிய விஜய் ஷங்கர்!

2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு முன் இரவு நடந்தது இதுதான் என சுவாரஷ்யமான தகவலை பகிர்ந்துள்ளார் இந்திய வீரர் விஜய் ஷங்கர்.

கிரிக்கெட் உலகில் மிகவும் சுவாரஸ்யம் நிறைந்த ஒரு போட்டி என்றால் அனைவருக்கும் நினைவிற்கு வருவது இந்தியா – பாகிஸ்தான் போட்டி தான். அந்த அளவிற்கு இரு அணிகளுக்கும் இடையே அனல்பறக்கும் ஆட்டம் நடைபெறும். இந்த இரு அணிகளும் மோதிக் கொள்வது போட்டியாக பார்க்காமல், அது ரசிகர்களுக்கு ஒரு உணர்வாக அமையும்.

"2019 உலகக்கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்குமுன் இரவு ட்ரெஸ்ஸிங் ரூமில்..." யாரும் அறிந்திராத தகவலை கூறிய விஜய் ஷங்கர்! 1

கடந்த பல ஆண்டுகளாக இரு அணிகளுக்கும் இடையிலான தனிப்பட்ட தொடர் நடைபெறாமல் இருந்து வருகிறது. ஐசிசி நடத்தும் தொடர்களில் மட்டுமே இந்த இரு அணிகளும் மோதிக் கொள்கின்றன.

இந்நிலையில் கடைசியாக 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு அணிகளும் மோதிக் கொண்டன. அந்த போட்டியில் இந்திய வீரர் ரோகித் சர்மா (140 ரன்கள்) சதம் விளாசினார். இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் இம்முறையும் பாகிஸ்தானை வெல்ல விடாமல், உலகக்கோப்பையில் தொடர்ச்சியான வெற்றியை பதிவு செய்தது.

"2019 உலகக்கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்குமுன் இரவு ட்ரெஸ்ஸிங் ரூமில்..." யாரும் அறிந்திராத தகவலை கூறிய விஜய் ஷங்கர்! 2

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியில் முதல் முறையாக பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்த விஜய்சங்கர். இந்த போட்டியில் கிடைத்த அனுபவத்தையும், போட்டிக்கு முன் இரவு நடந்த சுவாரசியமான ஒரு நிகழ்வையும் பகிர்ந்துகொண்டார்.

இந்தியா – பாகிஸ்தான் போட்டியைப்பற்றி பேசிய விஜய் சங்கர், “நான் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆடுகிறேன் என்பது முந்தைய நாள் தான் எனக்கு தெரியும். அன்றைய நாள் நாங்கள் சில வீரர்கள் ஒன்றாக ட்ரெஸ்ஸிங் ரூமில் பேசிக்கொண்டிருந்தோம். நீண்டநேரம் ஆனதால் அனைவரும் சேர்ந்து காஃபி குடிக்க வெளியே சென்றோம். அந்த கடையில் இருந்த பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் எங்களைப் பார்த்து படுமோசமாக திட்டினார்.

"2019 உலகக்கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்குமுன் இரவு ட்ரெஸ்ஸிங் ரூமில்..." யாரும் அறிந்திராத தகவலை கூறிய விஜய் ஷங்கர்! 3

நாங்கள் எதுவும் பேசாமல் மவுனமாக இருந்தோம். அவரது வசைகளை வாங்கி கொண்டிருந்தோம். எங்களை திட்டுவதை ரெக்கார்டு செய்துவைத்தார். அவர் என்னதான் செய்கிறார் என்று நாங்கள் பொறுமையாக பார்த்துக்கொண்டிருந்தோம். அந்த சம்பவத்தை என்னால் மறக்கவே முடியாது. அப்போதுதான், இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றால், எனக்கு என்னவென்பதே புரிந்தது என்று விஜய் சங்கர் தெரிவித்துள்ளார்.

மேலும், போட்டியை வென்றபிறகு புதிய அனுபவம் தந்ததாகவும் விஜய் ஷங்கர் பகிர்ந்துகொண்டார். • SHARE
 • விவரம் காண

  பயிற்சியாளர் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டிய பாகிஸ்தான் முன்னாள் வீரர்! 10 வருடம் கழித்து உண்மையை உடைத்த கிராண்ட் பிளவர்

  பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் யூனிஸ் கான் தன்னுடைய கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியதாக அந்த அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட்...

  வீட்டிலேயே இருந்த சிஎஸ்கே நட்சத்திரத்திற்கு கொரோனா? பரிசோதனைக்கு முன்னரே மருத்துவர்கள் கொடுத்த அதிர்ச்சி!

  வீட்டிலேயே இருந்த சிஎஸ்கே நட்சத்திர வீரருக்கு கொரோனா; இந்த பிரச்சினையால் ஏற்பட்ட விளைவு! ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே இருந்துவந்த சிஎஸ்கே வீரருக்கு காய்ச்சல் வந்ததால்,...

  இது மட்டும் நடந்தா உயிருக்கே உத்திரவாதம் கிடையாது; மைக்கெல் ஹசி வேதனை !!

  இது மட்டும் நடந்தா உயிருக்கே உத்திரவாதம் கிடையாது; மைக்கெல் ஹசி வேதனை டி.20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் நடக்க இருப்பதை நினைத்தாலே தனக்கு பயமாக இருப்பதாக...

  இந்த விசயத்தில் சச்சினை விட இவர் தான் சிறந்த வீரர்; முன்னாள் வீரர் அதிரடி கருத்து !!

  இந்த விசயத்தில் சச்சினை விட இவர் தான் சிறந்த வீரர்; முன்னாள் வீரர் அதிரடி கருத்து ஒயிட் பால் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை விட...

  நான் பார்த்து பயப்படும் இரண்டு பேட்ஸ்மேன்கள் இவர்கள் தான்; குல்தீப் யாதவ் ஓபன் டாக் !!

  நான் பார்த்து பயப்படும் இரண்டு பேட்ஸ்மேன்கள் இவர்கள் தான்; குல்தீப் யாதவ் ஓபன் டாக் தனக்கு அதிக தொல்லை கொடுக்கும் இரண்டு பேட்ஸ்மேன்கள் யார்...