JCC
ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீரராக மாறவேண்டுமா?
இங்கே ரெஜிஸ்டர் செய்யுங்கள்

*T&C Apply

வீடியோ: பைக்கில் மகளுடன் ஹாயாக ரவுண்டு அடிக்கும் தோனி! வைரல் வீடியோ உள்ளே..

மகள் ஜிவாவுடன் பைக்கில் சுற்றிவரும் தோனியின் விடியோவை அவரது மனைவி சாக்சி தோனி வெளியிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக கிரிக்கெட் போட்டிகள் இல்லாததால், வீரர்கள் தங்களது வீட்டிலேயே முடங்கி உள்ளனர். பயிற்சியில் கூட ஈடுபட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்திய அணியின் கேப்டன் தோனியோ, கடந்த உலகக்கோப்பை அரையிறுதிக்கு பிறகு இந்திய அணியில் ஆடவில்லை. இதனால், ரசிகர்கள் அவர் எங்கே? எங்கே? என தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

வீடியோ: பைக்கில் மகளுடன் ஹாயாக ரவுண்டு அடிக்கும் தோனி! வைரல் வீடியோ உள்ளே.. 1

வீரர்கள் பலர் சமூக வலைத்தளங்கள் மூலமாக ரசிகர்களுடன் உரையாடி வருகின்றனர். ஆதலால், தோனி சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இல்லாததால் அவர் என்ன செய்துகொண்டிருக்கிறார் என ரசிகர்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர்.

இந்நிலையில், தோனியின் மனைவி சாக்சி தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நேரலையில் அளித்த பேட்டியில், “தோனி, தனது நேரத்தை பைக் சரி செய்தும், அவ்வப்போது பப்ஜி ஆடியும் கழித்து வருகிறார்.” என தெரிவித்தார்.

வீடியோ: பைக்கில் மகளுடன் ஹாயாக ரவுண்டு அடிக்கும் தோனி! வைரல் வீடியோ உள்ளே.. 2

மேலும், தற்போது புதிய வீடியோ ஒன்றை சாக்சி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், தோனியும் அவரது மகளும் பண்ணை வீட்டில் ஜாலியாக இனிய மாலைப்பொழுது நேரத்தில் பைக்கில் சுற்றி வருகின்றனர். இந்த வீடியோ பதிவு இணையத்தில் மிகவும் வைரலாகியுள்ளது.

ஊரடங்கு முடிந்த பிறகு தோனி என்ன திட்டமிட்டுள்ளார் என்பதையும் சாக்ஷி சமீபத்தில் அளித்த பெட்டியில் தெரிவித்தார். அவர் கூறியதாவது, “தோனியும் நானும் மலைப்பகுதிக்கு சென்று ட்ரெக்கிங் செய்ய உள்ளோம். இருவருக்கும் அது மிகவும் பிடித்தமான ஒன்று. உடலுக்கும் ஆரோக்கியம் தரும். தோனிக்கு பனிப்பிரதேசங்களும் பிடிக்கும்.” என்றார்.

வீடியோ: பைக்கில் மகளுடன் ஹாயாக ரவுண்டு அடிக்கும் தோனி! வைரல் வீடியோ உள்ளே.. 3

உரையாடலின் போது, தோனிக்கு நீண்ட முடி இல்லாதபோது அவரைச் சந்திக்காதது என்னுடைய அதிர்ஷ்சம் என்று கூறியுள்ளார். அந்த காலத்தில் அவரை சந்தித்திருந்தால், திரும்பிக் கூட பார்த்திருக்க மாட்டேன் என்றார்.

“அதிர்ஷ்டவசமாக நான் அவரை நீண்ட கூந்தலுடன் தோனியை பார்க்கவில்லை. ஏனென்றால், நீளமான கூந்தல் அவருக்கு எப்படி இருக்கும் என என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. அழகியலாக இருக்காது” என்று சாக்‌ஷி ஒரு வெறுப்புடன் கூறினார். • SHARE
 • விவரம் காண

  வீட்டிலேயே இருந்த சிஎஸ்கே நட்சத்திரத்திற்கு கொரோனா? பரிசோதனைக்கு முன்னரே மருத்துவர்கள் கொடுத்த அதிர்ச்சி!

  வீட்டிலேயே இருந்த சிஎஸ்கே நட்சத்திர வீரருக்கு கொரோனா; இந்த பிரச்சினையால் ஏற்பட்ட விளைவு! ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே இருந்துவந்த சிஎஸ்கே வீரருக்கு காய்ச்சல் வந்ததால்,...

  இது மட்டும் நடந்தா உயிருக்கே உத்திரவாதம் கிடையாது; மைக்கெல் ஹசி வேதனை !!

  இது மட்டும் நடந்தா உயிருக்கே உத்திரவாதம் கிடையாது; மைக்கெல் ஹசி வேதனை டி.20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் நடக்க இருப்பதை நினைத்தாலே தனக்கு பயமாக இருப்பதாக...

  இந்த விசயத்தில் சச்சினை விட இவர் தான் சிறந்த வீரர்; முன்னாள் வீரர் அதிரடி கருத்து !!

  இந்த விசயத்தில் சச்சினை விட இவர் தான் சிறந்த வீரர்; முன்னாள் வீரர் அதிரடி கருத்து ஒயிட் பால் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை விட...

  நான் பார்த்து பயப்படும் இரண்டு பேட்ஸ்மேன்கள் இவர்கள் தான்; குல்தீப் யாதவ் ஓபன் டாக் !!

  நான் பார்த்து பயப்படும் இரண்டு பேட்ஸ்மேன்கள் இவர்கள் தான்; குல்தீப் யாதவ் ஓபன் டாக் தனக்கு அதிக தொல்லை கொடுக்கும் இரண்டு பேட்ஸ்மேன்கள் யார்...

  வாய வச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டீங்களடா..? முடிவுக்கு வந்தது சூதாட்ட வழக்கு !!

  வாய வச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டீங்களடா..? முடிவுக்கு வந்தது சூதாட்ட வழக்கு இந்திய அணி வெற்றிபெறும் வகையில் இலங்கை வீரர்கள் விளையாடியதற்கான எந்த ஆதாரமும்...