வீடியோ: "இனிமே நீ தான் எங்களோட பாட்சா பாய்.." போட்டி முடிந்தபின் சூரியகுமார் யாதவிற்கு பாட்சா ஸ்டைலில் முத்தமிட்ட சஹல்! 1

சதமடித்த சூரியகுமார் யாதவிற்கு, போட்டி முடிந்தபிறகு பாட்சா படம் பாணியில் முத்தமிட்டுள்ளார் யூசுவேந்திர சஹல். இதன் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் விளையாடிய 3வது மற்றும் டிசைடர் போட்டி ராஜ்கோட் மைதானத்தில் நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் செய்தது.

ராஜ்கோட் பேட்டிங் செய்ய ஏதுவாக இருந்ததால், சூரியகுமார் யாதவ் 7 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்கள் உட்பட 51 பந்துகளில் 112 ரன்கள் அடித்து, மைதானத்தில் இருந்த ரசிகர்களுக்கு வான வேடிக்கை காட்டினார். டி20 போட்டிகளில் இவர் அடிக்கும் 3வது சதம் இதுவாகும்.

வீடியோ: "இனிமே நீ தான் எங்களோட பாட்சா பாய்.." போட்டி முடிந்தபின் சூரியகுமார் யாதவிற்கு பாட்சா ஸ்டைலில் முத்தமிட்ட சஹல்! 2

45 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்ததன் மூலம், டி20 போட்டிகளில் அதிவேக சதத்தில் இரண்டாவது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் 35 பந்துகளுடன் முதலிடத்தில் இருக்கிறார்.

20 ஓவர்களில் இந்திய அணி 228/5 ரன்களை குவித்தது. அடுத்ததாக களமிறங்கிய இலங்கை அணியை 137 ரன்களுக்கு ஆல்-அவுட் செய்த இந்திய அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

சதமடித்த சூரியகுமார் யாதவ் ஆட்டநாயகனாகவும், பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் தொடர்முழுவதும் அசத்திய அக்ஸர் பட்டேல் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

வீடியோ: "இனிமே நீ தான் எங்களோட பாட்சா பாய்.." போட்டி முடிந்தபின் சூரியகுமார் யாதவிற்கு பாட்சா ஸ்டைலில் முத்தமிட்ட சஹல்! 3

போட்டி முடிந்தபின் வீரர்கள் கைகுலுக்கி செல்லும்போது, யூசுவேந்திர சஹல் நேரடியாக சூரியகுமார் யாதவிடம் சென்று, பாட்சா படத்தின் பாணியில் கையில் முத்தமிட்டார். சஹல் செய்த இந்த செயல் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

“நாங்க செய்ய நினைத்ததை நீ செஞ்சிட்ட சஹல்”, “இனிமே சூர்யா பாய் தான் நம்மளோட பாட்சா பாய்” என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.

வீடியோ: "இனிமே நீ தான் எங்களோட பாட்சா பாய்.." போட்டி முடிந்தபின் சூரியகுமார் யாதவிற்கு பாட்சா ஸ்டைலில் முத்தமிட்ட சஹல்! 4

வைரல் வீடியோ:

சூரியகுமார் பற்றி சஹல் பேசியபோது, ” அவரு வேற லெவல் பேட்ஸ்மேன், நான் அவரோட டீமில் இருப்பதை நினைத்து சந்தோசமாக உணர்கிறேன். அதேபோல் அக்ஸர் பட்டேல் பவுலர் மட்டுமல்ல, சிறந்த பேட்ஸ்மேனும் கூட. க்ளீன் ஹிட்டராக இருப்பதால், பவுலிங் செய்வது கடினம்.” என பேசினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *