இந்திய அணி கடந்த 5 மாதங்களாக ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணியுடன் சுற்றுப்பயணத் தொடரில் விளையாடி வந்தது. ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணி ஒரு நாள் தொடரை இழந்தாலும் டி20 மற்றும் டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தியது.
ஆஸ்திரேலிய தொடரில் இந்திய இளம் வீரர்கள் பலர் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தனர். இதைத் தொடர்ந்து இங்கிலாந்து அணியுடன் மிகப்பெரிய தொடரில் விளையாடிய இந்திய அணி மூன்று 3 தொடர்களையும் கைப்பற்றி அசத்தியது.

இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இதுபோன்ற சுற்றுப்பயணத் தொடர்களிலும், மற்ற தொடர்களிலும் மட்டுமே இந்திய அணிக்கு கோப்பைகளை பெற்று தருகிறார். இவர் ஐசிசி கோப்பையை இந்திய அணிக்காக பெற்றுத் தந்ததே இல்லை. இதனால் விராட் கோலியிடமிருந்து கேப்டன் பொறுப்பை பறிக்க வேண்டும் என்று பல விமர்சனங்கள் வந்து கொண்டே இருக்கிறது.
விராட் கோலிக்கு பதிலாக ரோகித் சர்மாவை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஏனென்றால் ரோகித் சர்மா ஐபிஎல் போட்டிகளில் 5 முறை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கோப்பைகளை பெற்றுக் கொடுத்திருக்கிறார். மேலும் 14 புள்ளிகள் வெற்றி சதவீதம் பெற்றிருக்கிறார். இதன் காரணமாக ரோகித் சர்மா இந்திய டி20 அணியின் கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் தேர்வாளர் சரண்தீப் சிங் பேசுகையில் “ விராட் கோலி தலைச்சிறந்த பேட்ஸ்மேன் ஆவார். அவரது பிட்னஸ் குறித்து யாரும் பேச முடியாது. இவர் தனது அதிரடி பேட்டிங்கில் பலமுறை இந்திய அணியை வெற்றி பெற வைத்திருக்கிறார். இவர் வெற்றிக்காக எந்த எல்லைக்கும் செல்ல கூடியவர். இவர் தனது அணியை வெற்றிப் பாதையில் சிறப்பாக வழிநடத்திச் சென்று கொண்டிருக்கும் போது ஏதோ ஒரு காரணத்தில் தவறு ஏற்பட்டு கோப்பையை வெல்ல முடியாமல் போகிறது.

ஆனால் ஒருபோதும் தனது அணியை தவறான வழியில் அழைத்து செல்வதில்லை. இது போன்ற சிறிய காரணங்களுக்கெல்லாம் அவரது கேப்டன்ஷிப்பை பிடுங்க முடியாது. இவர் என்னைக்காவது ஒருநாள் கண்டிப்பாக இந்திய அணிக்காக ஐசிசி கோப்பையை பெற்றுத்தருவார். அதை நாம் பார்க்கத்தான் போகிறோம்” என்று கூறியிருக்கிறார்.