சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அனைத்து வகையான போட்டிகளிலும் சேர்த்து குறைத்து ஆட்டத்தில் 16,000 ரன் குவித்து சாதனை படைத்துள்ளார். கிரிக்கெட் வரலாற்றில் இருவரை இவ்வளவு குறைந்த ஆட்டத்தில் 16,000 ரன்களை யாரிம் தொட்டதில்லை.

டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய அனைத்து வகையான போட்டிகளிலும் சேர்த்து வெறும் 350 ஆட்டங்களில் 16,000 ரன்னைக் கடந்துள்ளார் விராட் கோலி. இந்த பட்டயலில் சச்சின், டிராவிட், லாரா, அம்லா, தோணி, பாண்டிங் என யாரும் கோலியின் பக்கத்தில் கூட இல்லை.
குறைந்த ஆட்டத்தில் 16,000 ரன் அடித்தவர்கள் பட்டியல்
- விராட் கோலி – 350 ஆட்டங்களில்
- ஹாஷிம் அம்லா – 363 ஆட்டங்களில்
- பிரையன் லாரா -374 ஆட்டங்களில்
இந்தியா – இலங்கை அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் இன்று தொடங்குகியது. டாஸில் வெற்றி பெற்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. கொல்கத்தாவில் நடந்த முதலாவது டெஸ்ட் மழை பாதிப்பால் ‘டிரா’ ஆனது. நாக்பூரில் நடந்த 2-வது டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த டெஸ்டில் டிராவோ அல்லது வெற்றி பெற்றாலோ தொடர் இந்தியாவின் வசமாகி விடும். அத்துடன் தொடர்ச்சியாக 9 டெஸ்ட் தொடர்களை கைப்பற்றியிருக்கும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளின் உலக சாதனையை சமன் செய்து விடலாம்.

முந்தைய டெஸ்டில் படுதோல்வி அடைந்த இலங்கை அணி, அதற்கு பரிகாரம் தேடுவதற்கு முயற்சிக்கும். ஆனால் அந்த அணி வீரர்கள் ஆடி வரும் விதத்தை பார்த்தால் இந்தியாவிடம் முழுவீச்சில் தாக்குப்பிடிப்பார்களா? என்பது சந்தேகம் தான். இந்த தொடரில் இந்திய தரப்பில் ஒரு இரட்டை சதம், 4 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. ஆனால் இலங்கை பேட்ஸ்மேன்களில் ஒருவர் கூட மூன்று இலக்கை தொடவில்லை.