டெஸ்ட் அரங்கில் புதிய மைல்கல்லை எட்டினார் விராட் கோஹ்லி
சர்வதேச டெஸ்ட் அரங்கில் 4000 ரன்களை கடந்த விராட் கோஹ்லி, இந்த மைல்கல்லை எட்டிய முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இங்கிலாந்து சென்றுள்ள கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரில் இந்திய அணி மூன்று படுதோல்விகளை சந்திதது இருந்தாலும், ஒரு கேப்டனாக விராட் கோஹ்லி தனது பங்களிப்பை மிகச்சரியாகவே செய்து வருகிறார்.
இந்த தொடரின் துவக்கத்தில் இருந்தே தொடர்ந்து அபாரமாக விளையாடி சாதனைகளை குவித்து வரும் விராட் கோஹ்லி, இங்கிலாந்து அணியுடனான நான்காவது டெஸ்ட் போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் சர்வதேச டெஸ்ட் அரங்கில் 4000 ரன்களை கடந்து புதிய மைல்கல்லை எட்டினார்.
இது தவிர சர்வதேச டெஸ்ட் அரங்கில் 4000 ரன்களை கடந்த முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையையும் விராட் கோஹ்லி பெற்றுள்ளார்.
இதற்கு முன்னதாக சர்வதேச டெஸ்ட் அரங்கில் அதிக ரன்கள் குவித்துள்ள இந்திய கேப்டன் பட்டியலை இங்கு பார்ப்போம்.
5; கங்குலி – 2561 ரன்கள்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி சர்வதேச டெஸ்ட் அரங்கில் 2561 ரன்கள் குவித்து இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.