முதலில் பும்ராவின் பந்துவீச்சை மட்டம் தட்டிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அப்துல் ரசாக் தற்போது விராட் கோலியை சச்சினுடன் ஒப்பிட்டு பகிரங்கமான கருத்தினை தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் அப்துல் ரசாக், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ஊடகங்களின் வெளிச்சத்திற்கு வராமல் இருந்தார்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்திய வீரர்கள் பற்றிய கேள்விகளுக்கு தனது பகிரங்கமான கருத்துக்களை முன்வைத்தார். முதலாவதாக, மிகச் சிறப்பான பந்துவீச்சாளராக இருந்து வரும் பும்ராவை கடைசி ஓவரில் எதிர்கொண்டால் சமாளிக்க முடியுமா? எனக் கேட்டதற்கு,

“நான் மெக்ராத், வாசிம் அக்ரம் போன்ற ஜாம்பவான்களை பார்த்திருக்கிறேன். அதனால் பும்ரா போன்ற வீரர்கள் எனக்கு சிறுகுழந்தை போல எளிதில் ஆதிக்கம் செலுத்தி வென்றுவிடுவேன்” என்ன பகிரங்கமாக தெரிவித்தார்.
அடுத்ததாக, இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்,

“இந்திய கேப்டன் விராட் கோலி சீரானவர், ஆனால் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் முற்றிலும் வேறுபட்டவர். 1992 முதல் 2007 வரை நாங்கள் விளையாடிய அதே உலகத்தரம் வாய்ந்த வீரர்களை தற்போது காணவில்லை. டி20 போட்டிகள் கிரிக்கெட் ஆட்டத்தை முற்றிலுமாக மாற்றியுள்ளது.
பந்துவீச்சு, பேட்டிங் அல்லது பீல்டிங்கில் ஆழம் இல்லை. ஒரு சில அடிப்படைகளை கொண்டதாக மட்டுமே உள்ளது.

விராட் கோலி அதிக ரன்களை பெறுகிறார். அணிக்காக முன்நின்று, தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். ஆனால் நான் அவரை சச்சின் டெண்டுல்கரைப் போலவே ஒரே மதிப்பில் வைக்கவில்லை. சச்சின் முற்றிலும் வேறுபட்ட வகுப்பாக இருந்தார். எவருடனும் ஒப்பிடக்கூடியவர் அல்ல எந்தை தெரிவித்தே ஆகவேண்டும்” என்றார்.