இந்திய கேப்டன் விராட் கோலி டி20 பேட்ஸ்மேன்கள் தர வரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார். செப்.17 ஆம் தேதி ஐ.சி.சி வெளியிட்ட தர வரிசைப் பட்டியளில்,
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறார்.
மேலும், பாகிஸ்தானின் இளம் வீரர் பாபர் அசிம் சமீபத்தில் நடந்த உலக லெவுன் தொடரில் அசத்தியதால் தர வரிசப் பட்டியளில் முன்னேறியுள்ளார்.
அவர் 21 இடங்கள் முன்னேறி, 6ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். மேலும், பாகிஸ்தான் அணியின் அகமது சேசாத் 6 இடங்கள் முன்னேறி 22ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
பந்து வீச்சில், பாகிஸ்தான் அணியின் இமாட் வாசிம் முதல் இடத்தில் உள்ளார். இந்தியாவின் யார்க்கர் மன்னன் ஜஸ்பிரிட் பும்ரா 2ஆவது இடத்தை பிடித்துள்ளார்.
வங்காளதேச இடது கை வேகப்பந்து வீச்சாளர் முஸ்டபிஜுர் ரகுமான் 5வாது இடத்திலும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன் 8ஆவது இடத்திலும் உள்ளனர்.
மேலும், ஒரு ஆச்சரியமாக ஐக்கிட அரபு அமீரகத்தின் பந்து வீச்சாளர் முகமது நவீட் 10ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
டி20 ஆல் ரவுண்டர்கள தர வரிசையில், வங்கதேசத்தின் ஆல் ரவுண்டர் சகின் அல் ஹசன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
இந்தியா வீரர் யுவராஜ் சிங் 8 ஆவது இடத்தில் உள்ளார். மேலும், ஆஸ்திரேலியாவின் க்ளென் மேக்ஸ்வெல் இரண்டாவது இடத்திலும், ஆப்கனீஸ்தானின் முகமது நபி மூன்றாவது இடத்திலும் உள்ளார்.
டி20 அணிகள் தர வரிசையில், நியுசிலானது அணி முதலிடத்திலும் வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்றாவது இந்திய அணி 5ஆவது இடத்திலும் உள்ளது.