இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ளார். இதற்கு முழு தகுதியும் அவருக்கு உண்டு என சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், கோஹ்லிக்கு ஆண்டர்சனை எதிர்கொள்ள சில டிப்ஸ் கொடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்திய அணியின் கேப்டன் விராத் கோஹ்லி இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக ஆடினார். முதல் இன்னிங்சில் தனி ஒருவராக இருந்து 149 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
இரண்டாவது இன்னிங்சிலும் அதேபோல நிகழ்ந்தது. கோஹ்லி மட்டுமே 51 ரன்கள் எடுத்தார் மற்ற வீரர்கள் குறைவான ரன்களுக்கு ஆட்டமிழந்தது ஏமாற்றினர். இறுதியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியசாத்தில் முதல் போட்டியை இழந்தது.
இதன் மூலம் டெஸ்ட் தரவரிசை பட்டியலில் 903 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் இருந்த கோஹ்லி, 31 புள்ளிகள் பெற்று 934 புள்ளிகளுடன் முதலிடம் பெற்றார். ஸ்மித் 929 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். அதே நேரத்தில் ஜோ ரூட் 865 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறார்.
முதல் இன்னிங்சில் 149 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில 51 ரன்களும் எடுத்தார். மொத்தம் இவர் ஒருவர் மட்டுமே 200 ரன்கள் எடுத்து தனி ஒருவராக நின்று அணியை வெற்றி பாதைக்கு சற்று அருகில் வரை இட்டுசென்ற விராத் கோஹ்லிக்கு இந்த போட்டியின் முடிவில் தவரிசையில் 31 புள்ளிகள் வழங்கப்பட்டது.
இதனால் தான் ஸ்மித்தை விட 5 புள்ளிகள் அதிகம் பெற்று முன்னிலை வகிக்கிறார். விராத் கோஹ்லிக்கு இத்தினம்ஓலம் சற்று ஆறுதலாக இருந்தாலும், இறுதிவரை போராடி அணியை வெற்றிபெற செய்ய முடியவில்லையே என்கிற வருத்தம் நிச்சயம் இருக்கும்.
இதுகுறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கூறியதாவது, டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பெற விராத் கோஹ்லிக்கு அனைத்து தகுதியும் உள்ளது. அணியை தன் தோளில் சுமந்து தனி ஆளாக போராடி வருகிறார். முதல் போட்டியில் விட்டதை இரண்டாவது போட்டியில் நிச்சயம் செய்வார். மேலும், நான் அவருக்கு ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்துவீச்சை சமாளிக்க சில டிப்ஸ் கொடுத்துள்ளேன் எனவும் கூறினார்.