முதல் இடத்தை பிடித்த ரவீந்திர ஜடேஜா... விராட் கோலியும் முன்னேற்றம்; டெஸ்ட் போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு !! 1

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி., இன்று வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் வீரர்கள் அனைத்து பிரிவுகளிலும் டாப் 10 இடங்களில் இடம் பெற்றுள்ளனர்.

ஆல்-ரவுண்டர்களுக்கான பட்டியலில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா முதலிடம் பிடித்துள்ளார். இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 175* ரன்கள் குவித்ததோடு, 9 விக்கெட்டுகளையும் வீழ்த்தியதன் மூலம் ஜடேஜா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். ஜேசன் ஹோல்டர், அஷ்வின், ஷகிப் அல் ஹசன், பென் ஸ்டோக்ஸ் ஆகிய வீரர்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். ஜடேஜா 2 இடங்கள் முன்னேறி முதலிடம் பிடித்துள்ளார்.

முதல் இடத்தை பிடித்த ரவீந்திர ஜடேஜா... விராட் கோலியும் முன்னேற்றம்; டெஸ்ட் போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு !! 2

பேட்டிங்கில் இந்திய வீரர் விராட் கோலி 2 இடங்கள் முன்னேறி ஐந்தாவது இடம் பிடித்துள்ளார். கேப்டன் ரோகித் ஷர்மா ஆறாவது இடத்திலும், ரிஷப் பண்ட் பத்தாவது இடத்திலும் உள்ளார். இதில் பண்ட் ஒரு இடம் முன்னேறியுள்ளார்.

பவுலிங்கில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலிடத்திலும், இந்திய அணியின் சீனியர் வீரரான ரவிச்சந்திர அஷ்வின் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். பும்ராஹ் பத்தாவது இடத்தில் உள்ளார்.

முதல் இடத்தை பிடித்த ரவீந்திர ஜடேஜா... விராட் கோலியும் முன்னேற்றம்; டெஸ்ட் போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு !! 3

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புள்ளிப் பட்டியலில் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் உள்ளது. பாகிஸ்தான், இலங்கை, தென்னாப்பிரிக்கா, இந்தியா, நியூசிலாந்து, வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து ஆகிய அணிகள் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன. இது ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்திற்கு பிறகு வெளியிடப்பட்டதாகும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *