டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் அடித்த இந்திய கேப்டன்கள்

தற்போது இந்திய அணி இலங்கை அணியிடம் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்திய- இலங்கை அணிகளுக்கு இடையிலேயான முதல் டெஸ்ட் போட்டி சமனில் முடிந்தாலும், இந்திய அணியின் கேப்டன் சிறப்பாக விளையாடினார். முதல் இன்னிங்சில் டக் அவுட் ஆன விராட் கோலி, இரண்டாவது இன்னிங்சில் சிறப்பாக விளையாடி சதம் அடிக்க இந்திய அணி ஒரு நல்ல நிலைமைக்கு சென்றது.

5வது நாள் தொடக்கத்தில் இலங்கை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ஆனால், விராட் கோலி தூண் மாதிரி நின்று இந்திய அணிக்காக ரன் சேர்த்தார். இரண்டாவது இன்னிங்சில் சிறப்பாக விளையாடிய அவர் 104 ரன் அடித்து, தனது 18வது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார். இதனால், இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சுனில் கவாஸ்கர் சாதனையை சமன் செய்தார்.

டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் அடித்த இந்திய கேப்டன்கள் பட்டியலில் விராட் கோலி மற்றும் சுனில் கவாஸ்கர் ஆகியோர் முதல் இடத்தில் இருக்கிறார்கள். இருவரும் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருக்கும் போது 11 சதம் அடித்துள்ளார்கள். அதற்கு அடுத்த படியாக முகமது அசாருதீன் 9 சதங்களுடன், சச்சின் டெண்டுல்கர் 7 சதங்களுடன் உள்ளார்கள்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன்கள் மகேந்திர சிங் தோனி மற்றும் சவுரவ் கங்குலி ஆகியோர் கேப்டனாக 5 சதம் அடிக்க, ராகுல் டிராவிட் 4 சதம் அடித்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் அடித்த இந்திய கேப்டன்கள்:

1. விராட் கோலி / சுனில் கவாஸ்கர் – 11
2. முகமது அசாருதீன் – 9
3. சச்சின் டெண்டுல்கர் – 7
4. மகேந்திர சிங் தோனி/ சவுரவ் கங்குலி/ எம்.ஏ.கே பட்டாடி – 5
5. ராகுல் டிராவிட் – 4

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.