பெங்களூர் அணிக்கு தோல்வியைத் தொடர்ந்து மேலும் ஒரு இடி! விராட் கோலிக்கு பிரச்சனை!
ஐபிஎல் தொடரின் லீக் போட்டி நேற்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் இடையே நடைபெற்றது. அதில் எந்தவித மாற்றமும் இல்லை. முதல் போட்டியில் விளையாடிய அதே அணி களமிறங்கியது. அதனை தொடர்ந்து தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இரண்டு மாற்றங்கள் இருந்தன
முதலில் டாஸ் வென்ற விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். ஆனால் பந்துவீச்சை தேர்வு செய்தது அவர்களுக்கு பாதகமாக சென்று முடிவடைந்துவிட்டது. இன்னமும் ஐபிஎல் அணிகளும், அணியின் கேப்டன்களும் இந்த ஐக்கிய அரபு அமீரக ஆடுகளங்களை கணிக்க தவறுகிறார்கள் என்றே கூறலாம் தொடர்ந்து ஆடிய பஞ்சாப் அணி அதிரடியாக விளையாடி 206 ரன்கள் குவித்தது. குறிப்பாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுல் 69 பந்துகளில் 132 ரன்கள் அடித்து பல இமாலய சாதனைகளை படைத்தார்
கடைசி கட்டத்தில் மட்டும் கேஎல் ராகுல் 9 பந்துகளில் 42 ரன்கள் அடித்து ருத்ரதாண்டவம் ஆடினார். இந்த ஆட்டத்தில் 14 பவுண்டரிகள் 7 சிக்சர்கள் அடங்கும். இப்படி கே எல் ராகுல் அதிரடியாக விளையாடி கொண்டிருக்க விராட் கோலி கால் சரியாக பந்துவீச்சாளர்களை ரொட்டேட் செய்து கொடுக்க முடியவில்லை. டேல் ஸ்டெய்ன் போன்ற பந்துவீச்சாளர்களுக்கே கடுமையான அடி விழுந்தது. அவரது ஒரு ஓவரில் மட்டும் 26 ரன்கள் அடிக்கப்பட்டது. யாரையும் கேஎல் ராகுல் விட்டுவைக்கவில்லை இதன் காரணமாக விராட் கோலி பந்துவீச்சாளர்களை மெதுவாக பந்துவீச அனுமதித்தார்
மேலும் அதிகமாக யோசித்து பந்துவீச்சாளர்களை மாற்றிக் கொண்டிருந்தார். இதனைத்தொடர்ந்து 20 ஓவர் முடிக்க அதிகநேரம் எடுத்துக் கொண்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஐபிஎல் நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது
அனுமதிக்கப்பட்ட நேரத்தை அதிகம் எடுத்துக் கொண்டதால் 12 லட்சம் ரூபாய் இந்திய மதிப்பில் அபராதமாக விதிக்கப்பட்டது. ஏற்கனவேயே 97 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற ஆர்சிபி ரசிகர்களுக்கு இது இன்னுமொரு கவலையை கொடுத்துள்ளது