ஆஸ்திரேலிய நட்சத்திர வீரரின் மகளுக்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது ஜெர்சியை பரிசாக அளித்தார்.. 1


ஆஸ்திரேலிய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் வார்னரின் மகளுக்கு இந்திய அணியின் கேப்டன் தனது ஜெர்சியை கையெலுத்திட்டு பரிசாக கொடுத்துள்ளார்.

சமீபமாக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி டெஸ்ட் தொடர் மற்றும் டி20 தொடரில் வென்று சாதனை படைத்தது, இது கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மிகப் பெரிய சாதனையாகவே அனைத்து வீரர்களாகவும் பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலிய நட்சத்திர வீரரின் மகளுக்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது ஜெர்சியை பரிசாக அளித்தார்.. 2

போட்டியின்போது மைதானத்தில் மட்டும்தான் எதிரிகளாக இருப்போம் மற்றபடி நாங்கள் நண்பர்கள் என்று சொல்லும் பொருட்டு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது ஜெர்சியில் கையெழுத்திட்டு ஆஸ்திரேலிய அணி வீரர் டேவிட் வார்னரின் மகளுக்கு பரிசாக கொடுத்தார்,

விராட் கோலி ஜெர்சி அணிந்து டேவிட் வார்னரின் மகள் போஸ் கொடுக்கும் போட்டோவை வார்னர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது, டேவிட் வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்ததாவது இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்தது வருத்தமாக உள்ளது, இருந்தபோதும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி எனது மகளுக்கு கொடுத்த இந்த பரிசு என்னால் மறக்க முடியாது.

ஆஸ்திரேலிய நட்சத்திர வீரரின் மகளுக்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது ஜெர்சியை பரிசாக அளித்தார்.. 3

மேலும் எனது மகள் இதனால் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார் உங்களது இந்த அன்பளிப்புக்கு நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கூறியதாவது என்னையும் ஆரோன் பின்ச் தவிர்த்து என் மகளுக்கு விராட் கோலி தான் மிகவும் பிடித்தமான நபர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *